Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவு விநியோகம் செய்யும் உடற்குறையுள்ள ஓட்டுநர்கள் சந்திக்கும் சிரமங்கள்

உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள உடற்குறையுள்ள ஓட்டுநர்கள், உணவைக் குறுகிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

வாசிப்புநேரம் -

உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள உடற்குறையுள்ள ஓட்டுநர்கள், உணவைக் குறுகிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

முடக்குவாதம் கொண்ட ஓட்டுநர் ஜுனி ஷாஃபிக்கா, Deliveroo உணவு விநியோக நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

ஒரு சமயம், வாடிக்கையாளரின் மதிய உணவை அரை மணிநேரம் தாமதமாகக் கொடுத்தார்.

வாடிக்கையாளர் தமது சாப்பாட்டு நேரம் தாண்டிவிட்டது என்று கூறி, ஷாஃபிக்கா கொண்டுவந்த உணவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஒரு காலை இழந்த ஓட்டுநர் செய்ரி அட்னனுக்கும் (Saire Adnan) இதைப்போன்ற அனுபவங்கள் உண்டு.

வாடிக்கையாளர்களில் சிலர் அவரது உடற்குறையைப் பற்றி அறிந்தவுடன், தங்களின் உணவுக் கோரிக்கையை மீட்டுக்கொள்கிறார்கள்.

அது மனத்தை மிகவும் சங்கடப்படுத்துவதாகச் சொல்கிறார் செய்ரி.

இருப்பினும், அவர் உடற்குறையுள்ளவர் என்று அறிந்து, உணவுக்காகக் காத்திருக்கத் தயாராக இருக்கும் நல் உள்ளம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Foodpanda உணவு விநியோக நிறுவனத்தின் ஓட்டுநர்களில் உடற்குறையுள்ளோர் 60 பேர். GrabFood நிறுவனத்தில் 20 பேர்.

பொதுவாக நிறுவனங்கள் ஆதரவாக நடந்துகொள்வதாய் இவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், உணவை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கத் தங்களுக்குக் கூடுதல் அவகாசம் அளித்தால் நன்றாக இருக்கும் என்பது இவர்களின் வேண்டுகோள்.

இவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறைகளும் அவ்வப்போது எழவே செய்கின்றன.

ஆனாலும், நீக்குப்போக்கான வேலையாக இருப்பதால், விநியோக ஓட்டுநர்களாக இருப்பதற்கு உடற்குறையுள்ளோர் பலர் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றன நிறுவனங்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்