Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுகாதாரமான உணவை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது?

ஆரோக்கியமான உணவைச் சமைத்து உண்பதற்கு முதலில் சுகாதாரமான உணவுப் பொருள்களை வாங்குவது முக்கியம்.

வாசிப்புநேரம் -

ஆரோக்கியமான உணவைச் சமைத்து உண்பதற்கு முதலில் சுகாதாரமான உணவுப் பொருள்களை வாங்குவது முக்கியம்.

சுகாதாரமற்ற, ஆரோக்கியமற்ற உணவை வாங்கி உண்டால் சில வேளைகளில் நச்சுணவு பாதிப்பு ஏற்படலாம்.

அதைத் தவிர்க்க கிருமிகள் கலவாத உணவுப் பொருள்கள், காலாவதியாகாத உணவுப் பொருள்கள், கெட்டுப்போகாத உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் பார்த்து வாங்கவேண்டும்.

ஆரோக்கியமான உணவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

இதோ சில குறிப்புகள்:

- நம்பகமான கடைகளிலிருந்து உணவு வாங்கவேண்டும்.
- பொட்டலத்தில் அச்சிடப்படும் காலாவதியாகும் நாளுக்குப் பின்னரும் உணவு விற்கப்பட்டால், அதை வாங்கவேண்டாம்.
- கடையில் உறைந்துபோன உணவுப் பொருள்கள், அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கவேண்டாம்.
- சேதமடைந்த கேன்களில் உள்ள உணவுகளை வாங்கவேண்டாம்.
- பூஞ்சணம் உள்ள உணவுகளை வாங்கவேண்டாம்
- உணவு, பானங்கள் உள்ள போத்தல், கேன்கள் ஆகியவை இறுக்கமாக மூடப்பட்டுள்ளனவா என்பதைப் பார்த்து வாங்கவேண்டும். அவற்றில் ஓட்டையிருந்தால், உணவை வாங்கவேண்டாம்.

குறிப்பான சில உணவுகளை வாங்கும்போது தெரிந்துகொள்ளவேண்டியவை:

- உடைந்த முட்டைகளையும் அசுத்தமான முட்டைகளையும் வாங்கவேண்டாம்.
- இறைச்சி, மீன் ஆகியவற்றில் நிறமாற்றம் காணப்பட்டாலோ, துர்நாற்றம் வந்தாலோ அவற்றை வாங்க வேண்டாம்.
- இறைச்சியை வாங்கியவுடன் உடனே வீட்டிற்குச் சென்று அதனைக் குளிர்பதனப் பெட்டியில் வைப்பது நல்லது.
- சேதமில்லாத, கறைகளற்ற காய்கறி, பழங்களை வாங்கவேண்டும்.
- ஒரு சில நாட்களில் என்ன காய்கறி, பழங்களை உண்ண முடியுமோ அதற்கு ஏற்றவாறு வாங்குவது நல்லது. நீண்ட நாட்களுக்கு அவற்றை வைத்திருக்கவேண்டாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்