Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பொரித்த கோழியைத் தினமும் சாப்பிட்டால்...?

பொரித்த கோழியைத் தினமும் சாப்பிட்டால்...?

வாசிப்புநேரம் -
பொரித்த கோழியைத் தினமும் சாப்பிட்டால்...?

(படம்: Reuters)

நம்மில் பெரும்பாலோர் கோழிப் பிரியர்களாக இருக்கலாம்.

அதுவும் பொரித்த கோழி என்றால் சொல்லவே வேண்டாம்... ஒரு பிடிபிடிக்கலாம்.

இப்போது வீட்டுக்கே உணவை விநியோகம் செய்யும் சேவைகள் பல இருப்பதால், பிடித்தமான கோழிவகையைத் தினமும்கூடத் தெரிவுசெய்து சாப்பிடலாம் என்று மகிழும் பலர் உண்டு.

ஆனால் அது உடலைப் பாதிக்குமா?
Talking Point நிகழ்ச்சிப் படைப்பாளர் ஸ்டீவன் சியா (Steven Chia) இரண்டு வாரத்துக்குத் தினமும் கோழி சாப்பிடும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

"கோழி சாப்பிடுவது புலன்களுக்கான விருந்து. உணவகத்துக்குள் நுழையும்போது வாசனை உங்களை ஈர்க்கும். பிறர் கோழியைச் சாப்பிடும் சத்தம் உங்கள் காதுகளில் ஒலிக்கும். கண்ணுக்கும் அது விருந்தளிக்கும்."
- சமையற்கலை நிபுணர் சமீர் சப்லானி (Sameer Chablani)

படைப்பாளர் சியா முதல் பாதியில் பொரித்த கோழியை மகிழ்ச்சியாகத்தான் சாப்பிட்டார். பின்னர் அதில் உள்ள எண்ணெய் அவரைச் சோர்வடையச் செய்தது. சவாலின் இறுதியில் அவரின் கொழுப்புச் சத்தும் அதிகரித்திருந்தது.

கொழுப்புச்சத்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

கோழியை விடவே முடியாது என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் ஆரோக்கியமான எண்ணெய், கோழியைப் பொரிப்பதற்கான வெப்பநிலை, சமைக்கும் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

- CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்