Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க நடத்தப்பட்ட மாபெரும் கலைநிகழ்ச்சி

மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க நடத்தப்பட்ட மாபெரும் கலைநிகழ்ச்சி

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றம், தடுப்பு மருந்து விநியோகத்தில் சமநிலை, பஞ்சம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, உலகம் முழுவதும் Global Citizen Live கலைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து 24 மணிநேரம் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் BTS, பில்லி எய்லிஷ் (Billie Eilish), Coldplay, ஜெனிஃபர் லோப்பெஸ் (Jennifer Lopez) உள்ளிட்ட பல பிரபலக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

ஏழு கண்டங்களிலும் இடம்பெற்ற அந்த மாபெரும் கலைநிகழ்ச்சி, பாரிஸ் நகரில் தொடங்கியது.

முக்கிய அனைத்துலகச் சவால்களைக் கையாள, கலைஞர்கள், அரசியல்வாதிகள், நிறுவன நிர்வாகிகள், அரசக் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் நன்கொடைகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர் அல்லது நன்கொடை வழங்குவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கச் சார்பற்ற Global Citizen அமைப்பின் ஏற்பாட்டில் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.

பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியும்(Harry) அவர் மனைவி மேகன் மார்க்கலும் (Maghan Markle) நியூயார்க் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, அடிப்படை மனித உரிமையாகக் கருதப்படவேண்டும் என அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்