Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வனவிலங்கு ஆர்வலரின் வாழ்க்கையைக் கொண்டாடும் Google Doodle

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு ஆர்வலரான மறைந்த ஸ்டீவ் எர்வினின் வாழ்க்கை (Steve Irwin) இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வாசிப்புநேரம் -
வனவிலங்கு ஆர்வலரின் வாழ்க்கையைக் கொண்டாடும் Google Doodle

படம்: Google

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு ஆர்வலரான மறைந்த ஸ்டீவ் எர்வினின் வாழ்க்கை (Steve Irwin) இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

'Crocodile Hunter' என்று அழைக்கப்படும் அவரின் பிறந்தாளை முன்னிட்டு Google அதன் பக்கத்தில் சிறப்பு ஸ்டீவ் எர்வின் Google Doodle-ஐ இன்று வெளியிட்டது.

வெளியே சென்று சுற்றிப்பார்ப்பது, முதலையைக் கையில் பிடிப்பது, மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் நேரம் செலவிடுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்டீவ் எர்வினின் கேலிச் சித்திரப் படங்கள், Google Doodleஆக உருமாறியுள்ளன.

வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அவர் எடுத்த முயற்சிகளை Google Doodle எடுத்துக்கூறியது என்று அவருடைய மனைவி டெர்ரி எர்வின் தம்முடைய வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பின்போது 2006இல் ஸ்டீவ் எர்வின் திருக்கை மீனால் தாக்கப்பட்டு மாண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்