Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கூகள் நிறுவனத்தின் புதிய நவீன சாதனத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

கூகல் நிறுவனத்தின் புதிய நவீன சாதனத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கூகள் நிறுவனத்தின் புதிய நவீன சாதனத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

( படம்: GOOGLE )

கூகல் நிறுவனத்தின் புதிய நவீன சாதனத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அசைவுகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும் தன்மை கொண்டது கூகலின் அந்தப் புதிய சாதனம்.

Project Soli என்பது திட்டத்தின் பெயர்.

முப்பரிமாணக் கட்டமைப்பில் உணர்கருவிச் சாதனம் இயங்கும்.
அணிந்துகொள்ளும் வசதியுள்ள கருவிகள், தொலைபேசிகள், கணினிகள், வாகனங்கள் ஆகியவற்றில் புதிய சாதனத்தைப் பொருத்த முடியும்.

தொடுதிரைக் கட்டுப்பாட்டு அம்சம் இல்லாமல் இயங்கக்கூடிய சாதனம் சிறப்புத் தேவையுடையோருக்கு உதவக்கூடும்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் விரல் அசைவைக் கொண்டே சாதனத்தை இயக்க முடியும்.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்