Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல மில்லியன் ரசிகர்களைப் பெற்ற 'Grumpy Cat' மாண்டது

சிடுசிடுவென்ற முகத்துடன் இணையத்தில் பிரபலமான Grumpy Cat எனும் பூனை மாண்டது.

வாசிப்புநேரம் -
பல மில்லியன் ரசிகர்களைப் பெற்ற 'Grumpy Cat' மாண்டது

படம்: Instagram/realgrumpycat

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிடுசிடுவென்ற முகத்துடன் இணையத்தில் பிரபலமான Grumpy Cat எனும் பூனை மாண்டது.

7 வயதுப் பூனை நோய்வாய்ப்பட்டு மாண்டதாக அதன் பராமரிப்பாளர்கள்  Instagram, Twitter பக்கங்களில் பதிவுசெய்தனர்.

View this post on Instagram

Some days are grumpier than others...

A post shared by Grumpy Cat (@realgrumpycat) on

பிரபல பூனையின் முகத்துடன் உருவாக்கப்பட்ட meme உலகெங்கும் அதிகப் புகழ் பெற்றது. அனைவருக்கும் பூனை இன்பம் தந்ததாக அதன் உரிமையளர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

பலரும் அதற்கு இரங்கல் தெரிவித்தனர்.

2012-இல் இணையத்தில் புகழ் பெற்றது Grumpy Cat.  வளர்ச்சிக் குறைப்பாட்டின் காரணமாகப் பூனையின் முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல இருக்கும்.

Facebookஇல் பூனைக்குச் சுமார் 8.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். Instagramஇல் 2.5 மில்லியன் ரசிகர்களும் Twitterஇல் 1.5 மில்லியன் ரசிகர்களையும் கொண்டிருந்தது பூனை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்