Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Harry Potter திரைப்படத்தில் இடம்பெறும் மந்திர மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசையா?

சிறுவர்கள் மட்டுமல்லாமால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்துள்ள Harry Potter திரைப்படத்தில் கதாநாயகனின் நெருக்கமான தோழனாக வரும் Hagrid கதாபாத்திரம் பலருக்கு நினைவிருக்கும். 

வாசிப்புநேரம் -
Harry Potter திரைப்படத்தில் இடம்பெறும் மந்திர மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசையா?

(படம்: Universal Studios)

பெரிய உருவம்.

முகம் நிறைய தாடி.

சிறுவர்கள் மட்டுமல்லாமால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்துள்ள Harry Potter திரைப்படத்தில் கதாநாயகனின் நெருக்கமான தோழனாக வரும் Hagrid கதாபாத்திரம் பலருக்கு நினைவிருக்கும்.

அந்தக் கதாபாத்திரம் முரட்டுத்தனமாக ஓட்டும் மந்திர மோட்டார் வண்டியும் பலருக்கு நினைவிருக்கலாம்.

அதில் செல்ல ஆசையா?

ஆசைய நிறைவேற்ற Universal Orlando Resort கேளிக்கை பூங்காவிற்குச் செல்லலாம்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள அந்தக் கேளிக்கைப் பூங்காவில் புதிய விளையாட்டு அம்சம் அறிமுகமாகவுள்ளது.

Hagridஇன் மோட்டார் வண்டியை மையமாகக் கொண்டு அந்த விளையாட்டு அம்சம் அமைக்கப்படவுள்ளது.

பூங்காவின் Hogsmeade Village பகுதியில் அது இடம்பெறும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்