Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Harry Potter மாயாஜால உலகைக் கண்முன் கொண்டுவரும் கைபேசி விளையாட்டு

Harry Potter கதை ரசிகர்களுக்கு  நல்ல செய்தி ! 

வாசிப்புநேரம் -
Harry Potter மாயாஜால உலகைக் கண்முன் கொண்டுவரும் கைபேசி விளையாட்டு

(படம்: Harry Potter: Wizards Unite)

Harry Potter கதை ரசிகர்களுக்கு நல்ல செய்தி !

அவர்களும் ஒரு மந்திரவாதியாக ஆகலாம்!

எப்படி?

Harry Potter: Wizards Unite எனும் கைபேசி விளையாட்டு இன்று (ஜூன் 21) அறிமுகம் காண்கிறது.

விளையாட்டின்வழி அனைவரும் மாயாஜாலக் கதாபாத்திரங்களாகலாம்.

பிடித்தமான மந்திரக்கோலைத் தெரிவு செய்யலாம்.

என்ன விதமான மந்திர ஆற்றல் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவு செய்யலாம்.

மாய உலகத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் மனித உலகத்தில் கால் பதித்துள்ளன.

அவற்றை மந்திர உலகத்திற்குத் திருப்பி அனுப்புவதே விளையாட்டின் நோக்கம்.

இந்த விளையாட்டு Augmented Reality என்ற மிகைமெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாம் இருக்கும் சூழலிலேயே கதாபாத்திரங்களும் இருப்பதுபோல அது தோன்றவைக்கும்.

இலவசமான இந்த விளையாட்டு முதலில் அமெரிக்காவில், பிரிட்டனிலும் அறிமுகமாகும்.

ஆசியாவில் அது வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Pokemon Go விளையாட்டைத் தயாரித்த Niantic நிறுவனம் இந்த விளையாட்டையும் தயாரித்துள்ளது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்