Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடல்நலப் பரிசோதனைகள்.. என்ன.. எப்போது செய்யவேண்டும்?

உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வாசிப்புநேரம் -
உடல்நலப் பரிசோதனைகள்.. என்ன.. எப்போது செய்யவேண்டும்?

(படம்: Pixabay)

உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் நம்மில் எத்தனை பேர் முறையாகப் பரிசோதனையை மேற்கொள்கிறோம்?

உடல்நலப் பரிசோதனைகளைப் பற்றி மருத்துவர்கள் செந்தமிழ்ச் செல்வன், ராகவேந்திரா ஆகியோரிடமிருந்து தகவல் அறிந்துவந்தது 'செய்தி'.

எத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்?

25 வயதுக்கு மேற்பட்டவர்கள்
1. உடல்பருமன்
BMI அளவு
ஆண்டுக்கு ஒருமுறை

2. உயர் ரத்த அழுத்தம்
ரத்த அழுத்த அளவு
2 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி

3. பெண்களுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோய்
-Pap பரிசோதனை
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
-Human Papilomavirus (HPV) கிருமித்தொற்றுப் பரிசோதனை
5 ஆண்டுக்கு ஒருமுறை

40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
1.நீரிழிவு நோய்
மணிக்கணக்கில் உணவு உட்கொள்ளாமல் கணக்கிடப்படும் குளுக்கோஸ்(glucose) அளவு
3 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி

2. உயர் ரத்தக் கொழுப்பு
-மணிக்கணக்கில் உணவு உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பரிசோதனை
- சாதாரண நாட்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை
3 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி

50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
1.மலக்குடல் வாய்ப் புற்றுநோய்
- மலப் பரிசோதனை
ஆண்டுக்கு ஒருமுறை
-பெருங்குடல் பரிசோதனை (Colonoscopy)
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை

2. மார்பகப் புற்றுநோய்
மார்பகப் பரிசோதனை
2 ஆண்டுக்கு ஒருமுறை

பரிசோதனைகளைப் பற்றிய மேல் விவரங்களுக்கு https://www.healthhub.sg/live-healthy/403/abcs_of_health_screening இணையப்பக்கத்தை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்