Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாரடைப்புக்குப் பின் கூடுதல் உடற்பயிற்சி செய்வதால் ஆயுள் நீடிக்கும்: ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டவர்கள் கூடுதல் உடற்பயிற்சி செய்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக சுவீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மாரடைப்பிலிருந்து மீண்டவர்கள் கூடுதல் உடற்பயிற்சி செய்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக சுவீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு, 10இலிருந்து 12 மாதங்கள் உடற்பயிற்சி செய்தவர்களுடன் ஒப்பிடுகையில் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தவர்கள் இறந்துபோவதற்கான சாத்தியம் 71 விழுக்காடு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுமார் 22,000 பேரிடம் 4 ஆண்டுகள் நடத்தப்பட்டது ஆய்வு.

உடற்பயிற்சி செய்வது இருதய நோய்கள் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கிறது என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் சிரமமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை எங்கின்றனர் ஆய்வாளர்கள்.

வேகமான நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாரமும் 150 நிமிட உடற்பயிற்சி செய்வது நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்