Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இசையை உணரவைக்கும் ஆடை

காதால் கேட்க முடிந்தால் மட்டும்ளதான் இசையை ரசிக்க முடியுமா? இல்லை என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள்.

வாசிப்புநேரம் -
இசையை உணரவைக்கும் ஆடை

படம்: YouTube / CuteCircuit

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காதால் கேட்க முடிந்தால் மட்டும்தான் இசையை ரசிக்க முடியுமா? இல்லை என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள்.

ஹெர்மன் பர்ஹேன், ஹெரோடா பர்ஹேன் (Hermon, Heroda Berhane) இருவருக்கும் நாட்டியம் என்றால் பிரியம்.

ஆனால் இசையை அனுபவிப்பதற்கு அதைக் காதால் கேட்கும் ஆற்றல் இல்லாதது தடையாக இருந்தது.

இதனால் சகோதரிகள் 'Sound Shirt' எனும் வித்தியாசமான ஆடையை வடிவமைத்தனர்.

அதில் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவிகள்வழி இசையிலிருக்கும் வெவ்வேறு தாளங்களைப் பல்வேறு விதங்களில் ஒருவர் உணரலாம்.

உதாரணத்திற்கு வயலின் வாசிக்கப்படும்போது தாளங்களைக் கையில் உணரலாம்.

மேள இசை என்றால் அது முதுகில் இசைக்கேற்ப தட்டும்.

இதனால் காது கேட்காதோரும் உணர்வுபூர்வமாக இசையை அனுபவிக்கமுடியும்.

'Sound Shirt' விற்பனைக்கு வரும்போது அதன் விலை 3,000 பவுண்டுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுதிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்