Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதிக வெப்பம் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, எப்படி சூட்டைத் தணித்துக்கொள்வது?

ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. ஜூன் பிற்பாதியில் சிங்கப்பூரில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என முன்னுரைக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக வெப்பம் அதிகரித்துள்ளது.

ஜூன் பிற்பாதியில் சிங்கப்பூரில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என முன்னுரைக்கப்பட்டது.

ஜூன் 14 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவின் டில்லி நகரில் வெப்ப நிலை 48 டிகிரி செல்சியஸ் வரை சென்றது.

மே மாதத்தில் ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokkaido) தீவில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியது.

அதிக வெப்பம் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, எப்படி சூட்டைத் தணித்துக்கொள்வது?

- தேநீர், காப்பி, மதுபானம் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

- தண்ணீர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்

- தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைச் சாப்பிட்டு குளிர்ச்சி அடையலாம்.

- அதிக முறை குளித்து, காற்றோட்டத்திற்கு மின்விசிறியையும் குளிர்சாதனப் பெட்டியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- தங்கும் இடத்தில் திரைச்சிலைகளைக் கொண்டு சன்னல்களை மூடி, சூரிய வெளிச்சத்தை மறைக்கலாம்.

-வெளிப்புற நடவடிக்கைகளுக்கு வெப்பம் தணிந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

-வெளியே செல்லும்போது குடையைப் பயன்படுத்தலாம்.

-காற்றோட்டம் அளிக்கக்கூடிய அல்லது வெண்மையான ஆடைகளை அணியலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்