Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரத்தத்தில் உள்ள மதுவின் அளவு எப்படிச் சோதிக்கப்படுகிறது?

போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் வரம்புக்கு மீறி மது உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்கு பொதுவாகச் சுவாசச் சோதனையை மேற்கொள்வார்கள்.

வாசிப்புநேரம் -

போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் வரம்புக்கு மீறி மது உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்கு பொதுவாகச் சுவாசச் சோதனையை மேற்கொள்வார்கள்.

சுவாசச் சோதனை மது அருந்தியவர்களின் இரத்தத்தில் உள்ள மதுவின் அளவைப் பிரதிபலிக்கும்.

அது எப்படிக் கண்டறியப்படுகிறது?

  • 'Ethanol' என்னும் இரசாயனம் மதுபானங்களில் இருக்கிறது
  • அந்த இரசாயனம் மிக விரைவில் ஆவியாகும் தன்மைகொண்டது
  • மது அருந்தியபின், உடல் வெப்பநிலையில், இரசாயனம் ஆவியாகிவிடும்
  • அது வயிற்றிலிருந்து இரத்தத்துக்குச் சென்று விரைவாகக் கலந்துவிடும்
  • இரசாயனம் நுரையீரல் வழியாக மது அருந்தியவர்கள் விடும் சுவாசக் காற்றில் கலந்துவிடும்.
  • எந்த அளவுக்கு மது அருந்தப்பட்டதோ அந்த அளவிற்கு 'Ethanol' இரசாயனம் சுவாசக்காற்றில் தென்படும்.

சுவாசச் சோதனை 'Ethanol' இரசாயனத்தை எப்படிக் கண்டறியும்?

  • இயற்கை இரசாயனங்கள் Infrared எனும் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உறிஞ்சும் தன்மைகொண்டவை.
  • இரசாயனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உறிஞ்சும்.
  • சுவாசச் சோதனைக்காகப் பயன்படுத்தப்படும் குழாய் 'Ethanol' இரசாயனம் உறிஞ்சும் அகச்சிவப்புக் கதிர்வீச்சைக் கண்டறியும் ஆற்றல்கொண்டது.

சிங்கப்பூர்ச் சட்டத்தின் படி, 100 மில்லிலிட்டர் சுவாசக் காற்றில் 35 முதல் 54 மைக்ரோகிராம் வரை இரசாயனம் தென்பட்டால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான தண்டனை விதிக்கப்படும்.

ஓட்டுநர்களுக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்; 12 இலிருந்து 18 மாதங்கள் வரை வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படலாம்.

அண்மையில், டுரியான் பழத்தை அளவுக்கு அதிகமாக உண்ட சீன ஆடவர் ஒருவரிடம் சோதனை செய்யப்பட்டபோது, வரம்புக்கு மீறி மதுபானம் உட்கொண்டதை சோதனை காட்டியதாகச் செய்தி வெளியானது.

டுரியான், லிச்சி பழங்கள் ஆகியவற்றை உட்கொண்டபின்னோ, சில வகையான வாய் கொப்பளிக்கும் திரவங்களைப் பயன்படுத்திய பின்னோ வாகனம் ஓட்டினால், சுவாசச் சோதனையில் வரம்புக்கு மீறி மதுபானத்தை உட்கொண்டதைப் போல அது காட்டக்கூடும் என்று சீன ஊடகம் ஒன்று கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்