Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

டெங்கிப் பரவல் ஏன் வெகுவாக அதிகரித்துள்ளது...அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தினால் கடந்த மாதம் அதிகமானோர் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்ததாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
டெங்கிப் பரவல் ஏன் வெகுவாக அதிகரித்துள்ளது...அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

(கோப்புப் படம்: Pixabay)

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தினால் கடந்த மாதம் அதிகமானோர் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்ததாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

உள்புறங்களில், பகல் நேரங்களில் டெங்கிப் பரவலுக்குக் காரணமான Aedes aegypti கொசுக்கள் கடிப்பதாகக் கூறப்பட்டது.

குடியிருப்புப் பேட்டைகளில் அதிகமானோர் வீட்டில் இருக்கும்போது கொசுக்களுக்குக் கூடுதல் 'ரத்த உணவு' கிடைக்கிறது.

அதனுடன் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களின் எண்ணிக்கையும் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக அமைப்பு சுட்டியது.

முன்னதாக அதிகம் பரவாத DENV-3 வகை டெங்கிக் கிருமி மீண்டும் பரவுவது மற்றும் ஒரு காரணம். 30 ஆண்டுகளுக்கு முன் பரவிய கிருமிக்கு எதிராக மக்களுக்குக் குறைவான எதிர்ப்புச் சக்தி இருப்பதாகக் கூறப்பட்டது.

வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதும் அதிகரிக்கும்.

மக்கள் என்ன செய்யலாம்?

  • சோஃபா நாற்காலியின் அடியில், கழிப்பறைகள் போன்ற வீட்டில் உள்ள இருட்டான பகுதிகளில் கொசுத்தடுப்பு மருந்தைத் தெளிக்கலாம்.
  • கொசு வளையங்களை வீட்டின் காற்றோட்டமான இடங்களில் வைக்கலாம்.
  • கொசுத்தடுப்புத் திரைகளையும் பயன்படுத்தலாம்.
  • கொசுக் கடிகளைத் தவிர்க்க உடலில் கொசுத்தடுப்பு மருந்துகளைப் பூசிக்கொள்ளலாம். டெங்கிக் குழுமங்களில் வசிக்கும் நபர்களுக்குக் கடந்த மாதம் சுமார் 300,000 போத்தல் கொசுத்தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டன.
  • பூந்தொட்டிகள், பூந்தொட்டித் தட்டுகள், வாளிகள், கூரைக் குழாய்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்