Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டில் இருக்கும்போது நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடுவதை எப்படித் தவிர்ப்பது?

சிங்கப்பூரில் அத்தியாவசியச் சேவைகளில் பணிபுரிவோரைத் தவிர, மற்றவர்கள் பெரும்பாலும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அத்தியாவசியச் சேவைகளில் பணிபுரிவோரைத் தவிர, மற்றவர்கள் பெரும்பாலும் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர்.

மக்கள் வெளியே செல்வதையும் குறைத்துக்கொண்டுள்ளனர்.

வேலைக்கு இடையே வழக்கத்தைவிட அதிகப் பசி எடுப்பதாகவும் அதனால் அதிகம் நொறுக்குத் தீனியை உட்கொள்வதாகவும் பலரும் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சுவையான சமையல் குறிப்புகள் மக்களை அதிகம் சமைக்கவும் சாப்பிடவும் தூண்டுகின்றன.

நொறுக்குத் தீனி அதிகம் உண்பதற்குக் காரணம், மக்கள் வீட்டில் இருக்கும்போது சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை என்பதே என்றார் ஊட்டச்சத்து நிபுணர், ஷீட்டல் சோமய்யா (Sheetal Somaiya).

அலுப்பு ஏற்பட்டாலே சாப்பிடத் தோன்றும். அத்துடன், COVID-19 சூழலினால் சிலருக்கு மனவுளைச்சலும் அச்சமும் ஏற்பட்டிருக்கலாம். அந்நிலை, அதிகப் பசியை உருவாக்கும் சுரப்பிநீரை உற்பத்தி செய்யக்கூடியது.

அப்படி என்றால், மக்கள் என்ன செய்யலாம்?

  • இணையம் வழி நடத்தப்படும் உடற்பயிற்சி வகுப்புகளில் சேரலாம்.
  • 30 நிமிடங்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு, நாளைத் தொடங்கலாம்
  • நாள்தோறும், அவ்வப்போது தண்ணீர் குடிக்கவேண்டும்.
  • அருந்தும் ஒவ்வொரு காப்பிக்கும் கூடுதலாக இரண்டு குவளை தண்ணீர் குடிப்பது நல்லது.

நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடத் தோன்றுகிறதா? 

  • ஆரோக்கியமான உணவைக் கொறிக்கலாம். 
  • குளிர்பதனப் பெட்டியைத் திறந்தால், பழங்கள் போன்றவற்றைக் கண்களுக்கு முதலில் தெரியும் வகையில் எடுத்துவைக்கலாம்.
  • வடை, முறுக்கு போன்றவற்றுக்குப் பதில், ஆப்பம், பணியாரம் முதலியவற்றைச் சாப்பிடலாம்.
  • Sprouts எனப்படும் முளைக்கட்டுகளைக்கூட நொறுக்குத் தீனியாகச் சாப்பிடலாம். அதில் ஊட்டச்சத்து நிறையவே உள்ளது.
  • எந்தவோர் உணவையும் பொரிக்காமல் இருப்பது சிறந்தது.
  • உணவை அவித்துச் சாப்பிடுவது, உடல் அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்