Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பொங்கிவரும் உணர்வுகள்...சமாளிக்கலாம் இப்படி!

 எழுதிப் பாருங்கள் பேச முடியாத அளவுக்குச் சிலருக்குக் கோபம் வரக்கூடும். புத்தகத்தையும் பேனாவையும் உதவிக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

வாசிப்புநேரம் -

துன்பம், இன்பம், கோபம், அதிருப்தி என்று உணர்வுகள் பலவிதம்.

அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் சவாலே அடங்கியுள்ளது.

சிலர் சோகம் என்றால் தூங்கச் சிரமப்படுவர்.

(படம்:Pixabay)

ஒருசிலருக்குக் கவலை ஏற்பட்டால் காரணமின்றிக் கூட கோபம் வரலாம்.

ஒருவரை அமைதியாக இருக்கச் சொல்வது மிகச் சுலபம். ஆனால் பதற்ற நிலையில் நம்மால் பொங்கிவரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலுமா?

சில எளிய முறைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

(படம்:Pixabay)

- முறையாக மூச்சு விடுங்கள்
கோபத்தையும் பதற்றத்தையும் வெகுவிரைவில் குறைக்க உதவக்கூடிய வழி இது.

- சிந்தனைகளுக்குச் சவால் விடுங்கள்.
பிரச்சினை, இருப்பதைவிட பல மடங்கு மோசமானால், என்னென்ன நடக்கலாம் என்ற எண்ணங்கள் மனத்திரையில் ஓடும். அத்தகைய எண்ணங்களுக்கு முதலில் தடுப்புப் போடுங்கள்.


--இது தெளிவான சிந்தனையா? இப்படி இதற்கு முன்னர் நடந்துள்ளதா?
இதன் விளைவை என்னால் சமாளிக்க முடியுமா?'' போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலையும் நீங்கள் ஆராயவேண்டும்.

(படம்:Pixabay)



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்