Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெளியிடத்தில் தும்மல் வந்தால் என்ன செய்வது?

பொது இடங்களில் இருமினாலோ தும்மினாலோ இப்போதெல்லாம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்து ஓடுகின்றனர். 

வாசிப்புநேரம் -

பொது இடங்களில் இருமினாலோ தும்மினாலோ இப்போதெல்லாம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்து ஓடுகின்றனர்.

தும்மல் வருவது இயற்கை. ஆனால் அருகில் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பில்லாமல் தும்முவது எப்படி?

Tayka Family மருந்தகத்தின் மருத்துவர் டாக்டர் கண்ணன் ரங்கநாதனைக் கேட்டது 'செய்தி'.

டிஷ்யூத் தாள் இருந்தால்...

--டிஷ்யூத் தாளைக் கொண்டு மூக்கையும், வாயையும் முழுதாக மூடித் தும்மவும்.

--டிஷ்யூத் தாளைப் பயன்படுத்திய பின்னர் அதை உடனடியாகக் குப்பையில் போட்டுவிட்டு, கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவவும் அல்லது கிருமிநாசினியைப் பயன்படுத்தவும்.

டிஷ்யூத் தாள் இல்லை என்றால்...

--முழங்கையின் உட்புறத்திற்குள் தும்மலாம் அல்லது கைகளை வாய்,மூக்குப் பகுதிகளின் மேல் முழுதாகக் கூப்பித் தும்மலாம். ஆனால் கைகளையும், முழங்கையையும் சவர்க்காரம் கொண்டு உடனடியாகக் கழுவ வேண்டும்.

--தும்ம வேண்டுமென்றால் முடிந்தமட்டிலும் மற்றவர்களிடமிருந்து விலகிக்கொள்வது நல்லது.

தும்மலை அடக்கலாமா?...

-- தும்மல் வந்தால் மூக்கை விரல்களால் பிடித்து அடக்கலாம். ஆனால் இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

--பலமான தும்மல்களைக் கட்டுப்படுத்தினால், காதுச் சவ்வுக்கும், கண்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

தும்மல் சட்டையில் பட்டால்....

-- துணிகள், பொருள்களின்மீது கிருமித்தொற்று ஏற்படுவது அவ்வளவு சாத்தியமல்ல. கிருமிகள் படிந்திருக்ககூடிய துணிகளைத் தொட்டபின், மூக்கு, வாய்ப் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

-- ஆனால் மற்ற இடங்களில் கிருமி படிவதைத் தடுக்க கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

-- தும்மல் சட்டையில் பட்டால் அதைச் சலவை செய்வது முக்கியம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்