Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனிதர்கள் எப்போதிலிருந்து ஆடைகள் அணியத் தொடங்கினர்?

மனித இனம், சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலாக ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
மனிதர்கள் எப்போதிலிருந்து ஆடைகள் அணியத் தொடங்கினர்?

படம்: REUTERS

மனித இனம், சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலாக ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மனிதர்கள் எப்போதிலிருந்து ஆடைகள் அணியத் தொடங்கினர்?

அதற்கான விடை மொரோக்கோவில் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 120,000 ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் பயன்படுத்திய, எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் மொரோக்கோவின் Contrebandiers குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கருவிகளைக் கொண்டு, விலங்குகளின் உரோமம் பதனிடப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.

தொல்பொருள் பதிவுகளிலேயே, அதுவே ஆடைகளுக்கான ஆகப் பழமையான ஆதாரம் என்று கூறப்படுகிறது.

மனிதர்கள் குளுமையான பகுதிகளுக்குச் செல்ல செல்ல, ஆடைகளின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால், அந்தக் கருவிகளைக் கொண்டு அவர்கள் எத்தகைய ஆடைகளை உருவாக்கியிருக்கலாம் என்பது தெரியவில்லை.

மனிதர்கள், சுமார் 170,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் ஆடைகளை உருவாக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்