திரும்பிப் பார்ப்போமா: Instagram-இல் இவ்வாண்டு அதிகம் விரும்பப்பட்ட 5 படங்கள்
Instagram-இல் இவ்வாண்டு அதிகம் விரும்பப்பட்ட படங்கள் இதோ:
Instagram-இல் இவ்வாண்டு அதிகம் விரும்பப்பட்ட படங்கள் இதோ:
5. நண்பர்களோடு ஜெனிஃபர் அனிஸ்டன் எடுத்துக்கொண்ட படம்
விருப்பங்கள் - சுமார் 15.4 மில்லியன்
- அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான ஜெனிஃபர் அனிஸ்டன் 'Friends' தொடரில் தம்மோடு நடித்த சக நட்சத்திரங்களோடு எடுத்த படத்தைப் பதிவேற்றியிருந்தார்.
- அவர் பதிவேற்றிய அந்த முதல் படமே சாதனை படைத்துள்ளது. 5 மணி நேரம் 16 நிமிடங்களில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சாதனையை கின்னஸ் உறுதிசெய்தது. படத்தின் தரம் குறைவாக இருந்த போதிலும் பலரின் மனத்தை அது கவர்ந்தது.
- படம் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளேயே 1 மில்லியன் பேர் அவரது கணக்கைப் பின்தொடரத் தொடங்கினர்.
4. Planting trees for likes என்னும் பதிவு
விருப்பங்கள் - கிட்டத்தட்ட 15.7 மில்லியன்
- மரக் கன்றுகள் நட்டு வைக்கப்படுவதை இந்தப் பதிவு ஊக்குவிக்கிறது.
- 5 மில்லியன் விருப்பக் குறிகளைப் பெற்றால் 500,000 மரங்கள் இந்தோனேசியாவில் நட்டு வைக்கப்படும் என்று அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.
- 20 மில்லியன் விருப்பக் குறிகளைப் பெற்றுள்ளதால் 1 மில்லியன் மரங்கள் நட்டு வைக்கப்படும் என்று அது தெரிவித்தது.
உலக வெப்பம் உயர்ந்துவரும் நிலையில், பூமியைக் குளிரச் செய்யும் இந்தப் புத்தாக்கப் பதிவு இணையவாசிகளைக் கவர்ந்ததில் என்ன வியப்பு ?
3. சொல்லிசைக் கலைஞர் XXXTenacion-இன் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படம்
விருப்பங்கள் - ஏறத்தாழ 18 மில்லியன்
- 'LOVE IS WAR' என்னும் வாசகத்துடன் அந்தப் படம் பதிவேற்றப்பட்டது.
- அந்தச் சொல்லிசைக் கலைஞர் கொள்ளைச் சம்பவத்தின்போது சுடப்பட்டு மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
- அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரின் பக்கத்திற்குப் படையெடுத்தனர். அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாண்டார்.
- அவரது Instagram பக்கத்தில் இருக்கும் ஒரே ஒரு படமும் அதுவே.
2. குழந்தையின் பிஞ்சுக் கை ஒருவரின் விரலைப் பிடித்துக் கொண்டிருக்கும் படம்
விருப்பங்கள் - 18.6 மில்லியன்
- கடந்த ஆண்டு முதல் நிலையில் இருந்த அந்தப் பதிவு இவ்வாண்டு இரண்டாம் நிலைக்கு இறங்கியது.
- அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கைலி ஜென்னரின் (Kylie Jenner) பக்கத்தில் அந்தப் படம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பதிவேற்றப்பட்டது.
- கர்ப்ப காலத்தில் தாம் கருவுற்றிருப்பதைப் பற்றி அவர் உலகிற்கு ஏதும் அறிவிக்கவில்லை.
- குழந்தை பிறந்த பிறகுதான், தாம் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
1. பழுப்பு நிறமுள்ள முட்டையின் படம்
விருப்பங்கள் - 54 மில்லியனுக்கும் அதிகம்
- 'world_record_egg' என்னும் Instagram கணக்கிலிருந்து அந்தப் படம் பதிவேற்றப்பட்டது.
- மனநலம் குறித்த விழிப்புணர்வை அந்தப் படம் ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது.
- "ஆக அதிகமானோரின் விருப்பத்தைப் பெற்று ஒன்றிணைந்து உலகச் சாதனை படைப்போம்" என்னும் குறிப்புடன் படம் பதிவேற்றப்பட்டது.
அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கைலி ஜென்னரின் (Kylie Jenner) Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தின் சாதனையை முறியடித்து முட்டை முதலிடத்தில் வந்துள்ளது.