Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நோய்ப்பரவல் காலத்தில் யோகாவின் பயன் உணர்ந்து பலரும் இணைய வகுப்புகளில் சேர்வதாகக் கூறும் பயிற்றுவிப்பாளர்கள்

இன்று அனைத்துலக யோகா தினம்.

வாசிப்புநேரம் -

இன்று அனைத்துலக யோகா தினம்.

யோகாசனம் செய்வதால் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் பல பலன்கள் உண்டு என்பது நம்மில் பலர் அறிந்ததே.

தற்போதுள்ள நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் அதிகமானோர் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகின்றனர், 'செய்தி'-இடம் பேசிய பயிற்றுவிப்பாளர்கள்.

யோகா என்பது ஒரு வித வாழ்க்கைமுறை; அறிவியலும் கூட. அது நமது மனம், உடல், ஆத்மாவை ஒன்றிணைக்கிறது என்றார்,
யோகா பயிற்சி நிபுணர், லதா கண்ணன்

ஆசனங்கள் உடலுக்கு வலுச் சேர்க்கின்றன; மூச்சுப் பயற்சிகள் மனதை அமைதியாக்குகின்றன என்பதைப் பலர் உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.

(படங்கள்: லதா கண்ணன்)

(படம்: லதா கண்ணன்)

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, அதிகமானோர் யோகாவில் ஈடுபட கிருமித்தொற்றுக் காலம் நிறைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்திருப்பதாகச் சொன்னார், திருமதி லதா.

(படம்: லதா கண்ணன்)

அவர் 20 வருடங்களுக்கும் மேலாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.

(படம்: லதா கண்ணன்)

குறிப்பாக நோய்த்தொற்றுக் காலத்தில், வீட்டிலேயே பலரும் இருப்பதால் மனவுளைச்சல், அலுப்பு ஏற்படலாம். அவர்களால் எளிதாக வீட்டில் எந்தவொரு சாதனமும் இல்லாமல் யோகாவைச் செய்ய இயலும்

என்றார் அவர்.

"யோகா வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று பலரும் புரிந்துகொண்டிருப்பதாக 45 வயதாகும் யோகா பயிற்றுவிப்பாளர் பரிமளா சொன்னார்.

(படம்: பரிமளா)

(படம்: பரிமளா)

யோகா செய்வோருக்கு நாள் செல்லச்செல்ல நல்ல மனக் கட்டுப்பாடு கிடைக்கும். உடல் உறுப்புகளின் செயல்பாடு, செரிமானம், போன்றவற்றுக்கு அது வலுக்கொடுக்கும். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்."

எல்லா வயதினருக்கும் உகந்ததாக இருப்பதால், இது பிரபல உடற்பயிற்சி முறையானதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

சென்ற ஆண்டு அதிரடித் திட்டம் வந்தபின், அதிகமானோர் இணையம் வழி, வீட்டிலேயே வசதியாக யோகா கற்றுக்கொள்ளத் தொடங்கினர். இதனால் அது பிரபலமானது. அதற்கு முன்பு பெரும்பாலானேர் நேரடியாக வகுப்புக்கு வந்து கற்றுக்கொண்டனர். இருப்பினும் நேரடி வகுப்புகளுக்குத் தனித்தன்மையுண்டு.

என்றார் அவர்.

நேரடி வகுப்புகளில் கற்றுக்கொள்பவர்களின் தவறுகளைச் சரிசெய்வது எளிதாக இருக்கும். இருப்பினும், இணையம் வழி கற்றுக்கொண்டாலும், அதிகம் வெளியில் செல்லப் பலர் தயங்குவதால், இது ஓர் அன்றாடப் பயிற்சி முறையாகப் பலர் வாழ்வில் மாறியிருப்பது குறித்து பயிற்றுவிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

யோகா எந்தச் சமயத்தையும் சார்ந்தது அல்ல. அது அனைவருக்கும் அறிவியல் ரீதியாகப் பயனுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், எல்லா இனத்தவர்களும் இப்போது யோகா செய்ய ஆர்வம் காட்டுவதாக பயிற்றுவிப்பாளர்கள் கூறுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்