Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திரும்பிப் பார்ப்போமா: சமூக ஊடகங்களில் பிரபலமான சவால்கள்

கடந்த ஆண்டு Drake எனும் ஆங்கிலப் பாடகரின் 'In My Feelings' பாடலுக்கு நடனம் ஆட வேண்டிய 'கீகீ' சவாலைப் போன்று இந்த ஆண்டும் பல சவால்கள் பிரபலமாகின.

வாசிப்புநேரம் -

கடந்த ஆண்டு Drake எனும் ஆங்கிலப் பாடகரின் 'In My Feelings' பாடலுக்கு நடனம் ஆட வேண்டிய 'கீகீ' சவாலைப் போன்று இந்த ஆண்டும் பல சவால்கள் பிரபலமாகின.

அவை என்னென்ன?

பத்தாண்டுச் சவால்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், '10 year challenge' எனும் சவாலை இணையவாசிகள் மேற்கொண்டனர்.

இச்சவாலில், இணையவாசிகள் 2010-இலும் 2019-இலும் எப்படி இருந்தனர் என்பதை ஒப்பிடும் வகையில் படங்களைப் பதிவு செய்தனர்.

இந்தச் சவாலில் ஒருவர் காதொலிக் கருவியைக் கொண்டு சத்தமான இசையைக் கேட்பார்.

மற்றொருவர், சில வார்த்தைகளைச் சத்தமாகக் கூறுவார். இசை கேட்கும் நபர், அந்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

போத்தல் மூடி சவால்

போத்தலில் இறுக்கமாக மூடப்படாத மூடியைக் காலால் உதைத்து அகற்றவேண்டும். போத்தல் கீழே விழக்கூடாது. இதுதான் சவால்! இதைக் காணொளியாக எடுத்துப் பலர் பெருமையாக வெளியிட்டனர்.

வயதான தோற்றம் சவால் 

இச்சவாலில், நபர்கள் வயதானால் எப்படித் தோற்றமளிப்பர் என்பதை Faceapp என்ற செயலி வழியாகப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பலர் பதிவு செய்தனர்.

ஜோக்கோவி சவால்

சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒரு படத்தில், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தார்.

முதல் படியில் கால்களைக் குறுக்கே போட்டு அமர்ந்திருந்த அவர், இரண்டாவது படியில் தமது பாதங்கள் இரண்டையும் ஒன்றையொன்று நோக்கிய நிலையில் வைத்திருந்தார்.

அதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல.

ஜோக்கோவி சவாலில், நபர்கள் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவைப் போல் உட்கார முடியுமா என்பதை முயற்சி செய்து பார்த்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்