Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நான்கு விதமான புதிய iPhone 12 திறன்பேசிகள் இதோ... (படங்கள்)

Apple நிறுவனம், அடுத்த தலைமுறை iPhone 12-ரகத் திறன்பேசிகளை அறிமுகம் செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
நான்கு விதமான புதிய iPhone 12 திறன்பேசிகள் இதோ... (படங்கள்)

(படம்: Apple/Handout via REUTERS)

Apple நிறுவனம், அடுத்த தலைமுறை iPhone 12-ரகத் திறன்பேசிகளை அறிமுகம் செய்திருக்கிறது.

வேகமான ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பில் செயல்படும் அந்தத் திறன்பேசிகள் சில வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

iPhone 12:

திரையளவு: 6.1 அங்குலம்.

5 நிறங்களில் விற்கப்படுகின்றன.

அவை நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளை, சிவப்பு.

சேமிப்பகத் திறன்: 64GB, 128GB, 256GB

தொடக்க விலை: 1,299 வெள்ளியிலிருந்து...

(படம்: Apple via AP)

(படம்: Apple via AP)
iPhone 12 சிறியது (mini):

திரையளவு: 5.4 அங்குலம்.

5 நிறங்களில் விற்கப்படுகின்றன.

அவை நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளை, சிவப்பு.

சேமிப்பகத் திறன்: 64GB, 128GB, 256GB

தொடக்க விலை : 1,149 வெள்ளியிலிருந்து...


iPhone 12 Pro:

திரையளவு: 6.1 அங்குலம்.

4 நிறங்களில் விற்கப்படுகின்றன.

அவை கிராபைட், வெள்ளி, தங்கம், பசிபிக் நீலம்.

3 கேமராக்கள் கொண்டது.

சேமிப்பகத் திறன்: 128GB, 256GB, 512GB

தொடக்க விலை : 1,649 வெள்ளியிலிருந்து...

(படம்: Apple via AP)

(படம்: Apple via AP)

iPhone 12 Pro Max:

திரையளவு: 6.7 அங்குலம்.

4 நிறங்களில் விற்கப்படுகின்றன.

அவை கிராபைட், வெள்ளி, தங்கம், பசிபிக் நீலம்.

சேமிப்பகத் திறன்: 128GB, 256GB, 512GB

3 கேமராக்கள் கொண்டது.

தொடக்க விலை : 1,799 வெள்ளியிலிருந்து...

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அந்தத் திறன்பேசிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து, அது இங்கு கிடைக்கக்கூடும்.

இருப்பினும், முதன்முறையாக இந்த வகை iPhone திறன்பேசிகளோடு இலவசமாகக் காதொலிக் கருவியும் மின்னேற்றக் கருவியும் வழங்கப்பட மாட்டா.

கட்டுக்கடங்காமல் பெருகிவரும் மின்குப்பையைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே அதன் நோக்கம் என்று Apple நிறுவனம் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள், திறன்பேசிகளை மின்னேற்றம் செய்வதற்குரிய USB-C வடங்களைத் தனியே விலை கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

அது, வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏமாற்றமளித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்