Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

iPhone-இன் பின்பக்கத்தைத் தட்டினால், SafeEntry குறியீட்டைப் பயன்படுத்தலாம்...எப்படி?

iPhone வாசிகளே! SafeEntry ஸ்கேன் செய்ய இனி நீங்கள் உங்கள் திறன்பேசியின் பின்பக்கத்தைத் தட்டினால் போதும்.

வாசிப்புநேரம் -
iPhone-இன் பின்பக்கத்தைத் தட்டினால், SafeEntry குறியீட்டைப் பயன்படுத்தலாம்...எப்படி?

(படம்: GovTech)

iPhone வாசிகளே! SafeEntry ஸ்கேன் செய்ய இனி நீங்கள் உங்கள் திறன்பேசியின் பின்பக்கத்தைத் தட்டினால் போதும்.

புதிதாக வெளியாகியுள்ள iOS 14 மென்பொருளில் அந்த வசதி உள்ளது.

ஆனால், iPhone 8 அல்லது அதற்குப் பின் வந்த iPhoneகளில் மட்டுமே அந்த வசதி உண்டு.

அதைப் பயன்படுத்த...

  1.  Siri Shortcuts என்னும் சேவையை, SingPass செயலியில் உள்ள SafeEntry குறியீட்டுக்காகச் செயல்படுத்த வேண்டும்.
  2. ஸெட்டிங்ஸில் (settings), பேக் டேப் (back tap) எனும் செயல்முறையை முடுக்கிவிட வேண்டும்.
  3. திறன்பேசியின் பின்பக்கத்தை 2 முறை தட்டினால், SafeEntry குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
  4. 3 முறை தட்டினால், வெளியாகலாம் (Check out).

இதை mrbrown என்று அழைக்கப்படுகிற சிங்கப்பூரின் பிரபல வலைப்பதிவாளர் திரு. லீ கின் முன் (Lee Kin MUn) தமது Facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்