Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எலுமிச்சை சாறு முகத்திற்கா? உணவிற்கா?

சருமப் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை சாறு தீர்வாகுமா?

வாசிப்புநேரம் -

சருமப் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை சாறு தீர்வாகுமா?

Youtube, Tiktok ஆகிய சமூக வலைத்தளங்களில், முக அழகு தொடர்பான குறிப்புகளைப் பதிவேற்றம் செய்பவர்கள் பலரும், சருமப் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை சாற்றைப் பரிந்துரைப்பதைப் பார்த்திருக்கலாம்.

வீட்டில் இருக்கக்கூடிய மற்ற சில உணவுப் பொருள்களுடன் எலுமிச்சை சாறு கலந்த ஒரு கலவையைச் சிலர் பயன்படுத்தியும் பார்த்திருக்கலாம்.

ஆனால், எலுமிச்சை சாற்றை முகத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?


எலுமிச்சை சாற்றின் பலன்கள்:

  • வைட்டமின் C (vitamin C)

அது சருமப் பாதிப்பு, இளம் வயதிலேயே மூப்படைந்த தோற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

  • சருமத்தில் உள்ள எண்ணெய் அளவைக் குறைக்க உதவும்.
  • சருமத்தில் ஏற்படக்கூடிய தடிப்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டது.
  • முகப்பரு தழும்புகள், கரும் புள்ளிகள் ஆகியவற்றை வெண்மையாக்க உதவும்.


ஆனால், எலுமிச்சை சாற்றில் இயற்கையிலேயே உள்ள அமிலத்தன்மை, முகச் சருமத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு.

  • முகச்சருமம் காய்ந்துபோய், தோல் உரியத் தொடங்கலாம்.
  • சூரியக் கதிர்களால் சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம்.
  • சருமம் வீக்கமடையலாம் அல்லது சிவப்பாகலாம்.

அதனால் தான், பல சருமப் பராமரிப்பு நிபுணர்கள், எலுமிச்சை சாற்றை முகத்தில் பயன்படுத்துவதை ஆதரிப்பது இல்லை.

குறிப்பாக, sensitive skin என்கிற மென்மையான தோல் உடையவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது.

அதற்குப் பதிலாக, தயிர், வெள்ளரிக்காய், கற்றாழை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

(தகவல்கள்: Healthline)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்