Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Jaguar நிறுவனம் 2025ஆம் ஆண்டுமுதல் மின்-கார்களை மட்டுமே தயாரிக்கும்

சொகுசுக் கார் நிறுவனமான Jaguar, 2025ஆம் ஆண்டு முதல், மின்-கார்களை மட்டுமே தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சொகுசுக் கார் நிறுவனமான Jaguar, 2025ஆம் ஆண்டு முதல், மின்-கார்களை மட்டுமே தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் Tata Motors நிறுவனத்துக்குச் சொந்தமான Jaguar, அந்தத் திட்டத்தை வழிநடத்திச் செல்ல, ஆண்டுக்கு மூன்றரை பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருக்கிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் Land Rover ரகக் காரை 2024ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட அது இலக்குக் கொண்டுள்ளது.

தற்போது Jaguar-ரின் 7 கார் ரகங்களில், I-Pace ரகக் காரே, முற்றிலும் மின்சாரத்தில் இயங்குகிறது.

விநியோகத் தொடர்கள், தயாரிப்புகள், செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து, 2039ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றுவது Jaguar-ரின் இலக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்