Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இருமுறை புற்றுநோய் - ஒரு வாகன விபத்து - "மரணத்துக்கு மறுப்புச் சொன்ன மனிதன்"

"இருமுறை புற்றுநோய்  வந்ததாலும், கனரக வாகனம்   இடித்துச் சென்றதாலும் என்னைப் பலரும் துரதிர்ஷ்டசாலியெனக் கூறுகின்றனர்...

வாசிப்புநேரம் -
இருமுறை புற்றுநோய் - ஒரு வாகன விபத்து - "மரணத்துக்கு மறுப்புச் சொன்ன மனிதன்"

படம்: James Golding, PETER ALVEY PHOTOGRAPHER

"இருமுறை புற்றுநோய் வந்ததாலும், கனரக வாகனம் இடித்துச் சென்றதாலும் என்னைப் பலரும் துரதிர்ஷ்டசாலியெனக் கூறுகின்றனர்...

ஆனால், உலகிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி நான்தான்!" என்கிறார் ஜேம்ஸ் கொல்டிங் (James Golding).

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் தயாரித்தது Red Bull நிறுவனம்.

அதன் தலைப்பு - "ஜேம்ஸ் கொல்டிங் : மரணத்துக்குச் மறுப்புச் சொன்ன மனிதன்" (‘James Golding: the man who refuses to die’)

"Race Across America" என்ற 3,000 மைல் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும்போது ஆவணப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. 

40 வயது கொல்டிங் 10 ஆண்டுகளாக (மொத்தம் 3 மில்லியன் டாலர்) நிதி திரட்டுவது, உலகச் சாதனை படைப்பது (7 நாள்களில் 2,842 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்) போன்றவற்றில் நேரம் செலவிட்டுள்ளார்.

இவ்வாண்டு சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட பிறகு சாகச முயற்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மனைவி, இரு பிள்ளைகளுடன் போர்ச்சுகலில் பொழுதைக் கழிக்க விரும்பினார். 

ஆனால், கிருமிப்பரவலால் சைக்கிள் பந்தயம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

துவண்டு போகாமல் "என்னால் முடியும்" என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் கொல்டிங்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்