Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிட்டால், விரைவில் முதுமை வந்துவிடுமா?

நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிடுவோரின் மரபணுக் கட்டமைப்பில் மூப்படைவதைக் குறிக்கும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

வாசிப்புநேரம் -
நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிட்டால், விரைவில் முதுமை வந்துவிடுமா?

(படம்: Pixabay)

நொறுக்குத் தீனியை அதிகம் சாப்பிடுவோரின் மரபணுக் கட்டமைப்பில் மூப்படைவதைக் குறிக்கும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

ஸ்பெயினில் உள்ள University of Navarra எனும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர்.

பதப்படுத்தப்படும் உணவில் செயற்கைச் சுவை சேர்க்கப்படும்போது, அது 'Ultra-processed' உணவு என்று அழைக்கப்படுகிறது.

அந்த உணவைத் தினசரி 3 வேளைக்கும் அதிகமாகச் சாப்பிட்டால், மரபணுக் கட்டமைப்பில் உள்ள telomeres எனும் பகுதியின் நீளம் குறையும் சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மனிதர்கள் மூப்படையும்போது நாளடைவில் telomeres பகுதியின் நீளம் குறைந்துகொண்டே செல்லும்.

அறிவியல் ரீதியாக, அது மனிதர்கள் முதுமை அடைவதற்கான குறியீடாகத் திகழ்கிறது.

American Journal of Clinical Nutrition எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு, 2008-ஆம் ஆண்டில் தொடங்கியது.

55 வயதுக்கும் மேற்பட்ட 900 பேர், தங்களின் உணவுமுறையை அடிப்படையாகக் கொண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

அவர்கள் ஈராண்டுக்கு ஒருமுறை தங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துத் தகவல் அளித்துவந்தனர்.

'Ultra-processed' உணவுவகையை அதிகம் சாப்பிடும் குழுவுக்குத் தங்களின் telomeres பகுதியின் நீளம் குறைவதற்கு, ஆக அதிகமாக 82 விழுக்காடு சாத்தியம் இருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்