Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நடிகர் கமல் ஹாசனின் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டத்தைக் கண்டு அதிர்ந்த இணையவாசிகள்

நடிகர் கமல் ஹாசனின் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டத்தைக் கண்டு அதிர்ந்த இணையவாசிகள்

வாசிப்புநேரம் -

இந்தியத் திரைப்பட நடிகர் கமல் ஹாசனின் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

நேற்று, கமல் தமது 66-ஆவது பிறந்த நாளை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுக் கொண்டாடினார்.

முன்னோட்டத்தைக் கண்டு ரசித்த அவரது ரசிகர்கள், இணையத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தினர்.

முறுக்கு மீசை, தாடி, கம்பீரமான தோற்றம், மிடுக்கென நடை என, கமல் நடிப்பில் மிரட்டியிருந்தார்.

முன்னோட்டம் Youtube தளத்தில் சுமார் 4 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய உளவாளியாக கமல் நடித்த விக்ரம் படம் வெளியானது.

அந்த கதையின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்