Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அயன், கோ, மாற்றான் போன்ற படங்களை உருவாக்கிய இயக்குநர் K V ஆனந்த் காலமானார்

அயன், கோ, மாற்றான் போன்ற படங்களை உருவாக்கிய இயக்குநர் K V ஆனந்த் காலமானார்

வாசிப்புநேரம் -
அயன், கோ, மாற்றான் போன்ற படங்களை உருவாக்கிய இயக்குநர் K V ஆனந்த் காலமானார்

படம்: Facebook/Kv anandh

அயன், கோ, காப்பான், மாற்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர் K V ஆனந்த் காலமானார்.

அவருக்கு வயது 54.

திரு ஆனந்த் மாரடைப்பால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புகைப்படப் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கி, தேவர் மகன், அமரன், மீரா உள்ளிட்ட படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் முதல்வன், சிவாஜி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகவும் திரு ஆனந்த் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு தென்மாவின் கொம்பத் (Thenmavin Kombath) என்ற படத்திற்காக இந்தியத் திரைப்படங்களுக்கான தேசிய விருதை அவர் வென்றார்.

K V ஆனந்தின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகத்தின் பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வழி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்