Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

LCD திரைகளிலிருந்து கசியும் ரசாயனங்கள் மரபணுவை மாற்றக்கூடியவை : ஆராய்ச்சி

மின்னிலக்கச் சாதனங்களின் திரைகளிலிருந்து கசியும் ரசாயனங்கள் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும் என்று சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மின்னிலக்கச் சாதனங்களின் திரைகளிலிருந்து கசியும் ரசாயனங்கள் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும் என்று சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, LCD திரைகளிலிருந்து கசியும் ரசாயனங்கள் மரபணுவை மாற்றக்கூடியவை என்று South China Morning Post வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மின்னிலக்கச் சாதனங்களின் திரைகளில் இடம்பெறும் 360 ரசாயனங்கள், நான்ஜிங் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டன.

அவற்றுள், 87 ரசாயனங்கள் மின்னிலக்கச் சாதனங்களின் திரைகளிலிருந்து கசிந்தால், மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ரசாயனக் கசிவு எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்