Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உயரத்தை அதிகரிக்க, கால்களை நீளமாக்கும் அறுவை சிகிச்சை

உயரமாகத் தெரியவேண்டும் என்பதற்காகக் கால்களை நீளமாக்கும் அறுவை சிகிச்சையை நாடும் போக்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

வாசிப்புநேரம் -


உயரமாகத் தெரியவேண்டும் என்பதற்காகக் கால்களை நீளமாக்கும் அறுவை சிகிச்சையை நாடும் போக்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுபற்றி BBC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உயரத்தை ஒரு சில அங்குலம் அதிகரிப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சையின் மூலம், உயரத்தை ஐந்து அங்குலம் (13cm) வரை அதிகரிக்க முடியுமாம்.

உயரம் குறைவாக இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்றும்,
காதல், கல்யாணம் போன்றவற்றுக்குக் குறைவான உயரம் தடையாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

அறுவை சிகிச்சை வலி மிகுந்ததாக இருக்கும்.

கால்களை உடைத்து, அவற்றை நீட்டித்து, பின் குழந்தையைப் போல நடை பழகுவதற்குச் சமம் என்கின்றனர் அறுவை சிகிச்சை செய்துகொண்டோர்.

அதன் சிக்கலான செயல்முறை சில சமயம் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று BBC நிறுவனத்திடம் பேசிய சுகாதார நிபுணர்கள் கூறினர்.

சிலருக்கு நீண்டகால பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.

தற்போது, அந்த சிகிச்சையை 12-ற்கும் மேற்பட்ட நாடுகள் வழங்குகின்றன.

சிகிச்சைக்குக் கட்டணம் 50,000 பவுண்ட்.... அதாவது, சுமார் 90,000 வெள்ளி! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்