Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாழ்க்கைக் குறிப்பு: சவால் மிக்க சூழலைக் கடந்துசெல்வது எப்படி?

கிருமித்தொற்றுச் சூழலினால் பல்வேறு வழிகளில் மனிதர்களின் வாழ்க்கை திசை மாறியுள்ளது.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றுச் சூழலினால் பல்வேறு வழிகளில் மனிதர்களின் வாழ்க்கை திசை மாறியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கவலைகள்.

அவற்றில் முழுமையாக மூழ்கினால் மனநிலை பாதிக்கப்படும் என்று உளவியலாளரும் நூலாசிரியருமான நிக் டெஸ்லர் (Nick Tasler) New York Times-இடம் கூறினார்.

ஆண்டின் ஆரம்பத்தில் போட்ட திட்டங்கள் பலவற்றில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் வேளையில், அதனைச் சமாளிக்கவேண்டிய சூழல் உருவாகும்.

மாற்றங்களைச் சமாளிக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.


1. எதிர்பார்ப்புகளை மாற்றி அமையுங்கள்

நாம் ஒரு நாளை எப்படிச் செலவிடவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடுகிறோம். திட்டங்களுக்கேற்ப அந்த நாள் அமையாதபோது வருத்தமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பானதே என்கிறார் டெஸ்லர்.

திட்டமிட்டபடி வாழ்க்கை அமையாதபோது எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வது முக்கியம்.


2. தன்னம்பிக்கையே பலம்

உங்களை நீங்களே குறைத்து எடைபோட்டால் மாற்றங்களைச் சமாளிக்கும் ஆற்றலை நீங்கள் இழந்துவிடக்கூடும் என்கிறார் தலைமைத்துவ நிபுணர் மார்கீ வாரல் (Margie Warrell). ஆகையால், தன்னம்பிக்கை மிக முக்கியம்.


3. செயல்படுங்கள்!

வாழ்க்கை எதிர்பாராவண்ணம் செல்லும்போது அதற்கேற்றவாறு மனத்தளவில் மாற்றத்தை ஏற்கவேண்டும் என்கிறார் டெஸ்லர்.

மாற்றத்தை நோக்கி முதலில் சிறுசிறு செயல்களில் ஈடுபடுங்கள். அவற்றில் வெற்றி கிட்டினால், மேலும் பெரிய செயல்களில் இறங்கி, திடமான மனநிலையை அடையலாம்.


4. கண்ணோட்டத்தை மாற்றவேண்டும்

திட்டமிட்டபடி ஏதேனும் இடம்பெறவில்லையென்றால் வருத்தத்தில் ஆழ்ந்துவிடாதீர்கள். அதிலிருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம்? எவ்வாறு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மேம்படுத்தலாம் - இவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பின்னோக்கிய மனப்போக்கைத் தடுக்கலாம்.

கண்ணோட்டத்தை முன்னோக்கிச் செலுத்துவதன் மூலம், திடீர் மாற்றங்களைச் சமாளிக்கலாம்; வாழ்க்கை சிறப்படையும் என்கிறார் மனோவியல் நிபுணர் பெஞ்சமின் ஹார்டி (Benjamin Hardy).

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்