Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீண்ட நேர விமானப் பயணம் - சமாளிப்பது எப்படி?

தற்போது விடுமுறைக் காலம். பலர் வெளிநாட்டுப் பயணம் செல்லலாம். நீண்ட தூரம் விமானத்தில் பயணம் செய்ய நேரிடும்.  நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது அலுப்புத் தட்டும்.  அல்லது செய்ய ஒன்றும் இல்லாததால் சலிப்புத் தட்டும்.  என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -
நீண்ட நேர விமானப் பயணம் - சமாளிப்பது எப்படி?

(படம்: Pixabay)


தற்போது விடுமுறைக் காலம்.

பலர் வெளிநாட்டுப் பயணம் செல்லலாம்.

நீண்ட தூரம் விமானத்தில் பயணம் செய்ய நேரிடும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது அலுப்புத் தட்டும்.

அல்லது செய்ய ஒன்றும் இல்லாததால் சலிப்புத் தட்டும்.

என்ன செய்யலாம்?

சில வழிகள்:

1. ஆடை

நீண்ட நேரம் விமானத்தில் பயணம் செய்யும்போது தூக்கம் வரக்கூடும்.

சோம்பல் முறிக்கத் தோன்றும்.

காலணிகளைக் கழற்றத் தோன்றும்.

இவை அனைத்துக்கும் வசதியான உடை, காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்.

(படம்: Pixabay)

2. இருக்கையைத் தேர்ந்தெடுப்பது

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது கால்களை நீட்டிக்கொள்ள சிலர் விரும்புவார்கள். அதற்கு ஏற்றாற்போல இருக்கைகளுக்குப் பதிவுசெய்யும்போது கூடுதல் இடம் உள்ள இருக்கைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இருபக்க இருக்கைகளுக்கு நடுவே நடந்துசெல்ல விரும்புவார்கள். சிலர் அடிக்கடி கழிப்பறை செல்வார்கள். நடுப்பாதை அருகிலுள்ள இருக்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

3. உறங்கத் தயாராகச் செல்லுங்கள்

குறைந்த எடைகொண்ட போர்வை, பயணத் தலையணை போன்றவை சுகமான உறக்கத்துக்கு வழிசெய்யும்.

விமானத்தில் குழந்தையின் அழுகுரல், மற்றவர்களின் குறட்டைச் சத்தம் அனைத்தையும் மறக்க காதை அடைக்கும் earplugs உதவும்.

நீண்ட உறக்கத்திற்குப் பின் பல் துலக்கும் பொருள்களும் தேவைப்படலாம்.

4. நொறுக்குத் தீனி

(படம்: Pixabay)

விமானத்தில் உணவு இருக்கும்.

ஆனால் நீண்ட பயணத்தில் திடீரெனப் பசிக்கக்கூடும். அப்போது கையில் சிறு நொறுக்குத் தீனி இருந்தால் உதவியாக இருக்கும்.

5. விமானத்தில் அங்குமிங்கும் செல்வது

இரத்தக் குழாயில் இரத்தக் கட்டியை உருவாக்கும் deep vein thrombosis ஏற்படாமல் இருக்க இருக்கையில் அமர்ந்தவாறே கால்களுக்குச் சிறு பயிற்சி கொடுக்கலாம்.

விமானத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நடந்துசெல்லலாம்.

6. திறன்பேசியில் பிடித்த புத்தகம், படங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

(படம்: Pixabay)

நீண்ட நேரம் விமானத்தில் இருப்பதால் சலிப்பு ஏற்படலாம்.

திறன்பேசியில் 3இலிருந்து 4 திரைப்படங்கள், பிடித்த புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

நீண்டகாலம் படிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு நேரம் இல்லாமல்போன புத்தகங்களையும் இப்போது படிக்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்