Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகத்தை மறைக்கும் முகக்கவசங்கள்...ஆனால் ஒப்பனைக்கு இன்னமும் இடமுண்டு...

COVID-19 சூழலுக்கு முன்னர், பெண்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கு எடுக்கும் நேரத்தில் பெரும்பகுதி, முக ஒப்பனைக்குச் சென்றிருக்கலாம்.

வாசிப்புநேரம் -

COVID-19 சூழலுக்கு முன்னர், பெண்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கு எடுக்கும் நேரத்தில் பெரும்பகுதி, முக ஒப்பனைக்குச் சென்றிருக்கலாம்.

முகக்கவசங்கள் அணிவதைக் கட்டாயமாக்கிய பின்னர், முன்புபோல் முக ஒப்பனையைச் செய்ய வாய்ப்பில்லை.

(படம்: Pixabay)

இந்நிலையில், மக்கள் தங்கள் முக ஒப்பனையில் என்னென்ன மாற்றங்களைச் செய்து வருகின்றனர்?

முகத்தில் பருக்கள் ஏற்படுவதால், நான் முக ஒப்பனையை நிறுத்திவிட்டேன். நான் பவுடரை (Powder) மட்டுமே பூசுகிறேன்.

- திவ்யா, 24, நிதி ஆலோசகர்

நிகழ்ச்சிகளுக்குச் செல்லவேண்டியிருந்தால் மட்டுமே ஒப்பனை செய்துகொள்வேன். இருப்பினும் முன்பு பயன்படுத்திய அளவுடன் ஒப்பிடுகையில் ஒப்பனை, சற்று குறைவாக இருக்கும். ஈரப்பதம் கொண்ட பொருள்களை அதிகம் பயன்படுத்துவேன் 

- ஜெயந்தி, 35, உணவக உரிமையாளர்

முகத்தில் ஒப்பனை செய்யும்போது அது முகக்கவசம் மீது படிந்துவிடுகிறது. கண்களுக்கு மட்டும் Eye Liner-உம் இமைகளுக்குச் சிறிது ஒப்பனையும் செய்வேன்.

- பல்கீஸ், 25, நிதித்துறை ஊழியர்


நான் தாதியாக வேலைசெய்வதால் முகக்கவசத்தை நீண்டநேரத்திற்கு அணியவேண்டும். ஒப்பனை செய்தால் தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன.

- தர்ஷினி, 35, தாதி

முகக்கவசத்தை அணியும்போது ஒவ்வாமை, பருக்கள் ஆகியவை ஏற்பட்டால் கண்களுக்கு மட்டும் ஒப்பனை செய்துகொள்ளலாம் என்கிறார், ஒப்பனைக் கலைஞர் காயத்திரி.

COVID-19 சூழலில் முக ஒப்பனை பாணிகளில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன?

அவர் கூறும் பரிந்துரைகள்..

முகக்கவசத்தை அணியும்போது, கண்கள் மீதே முதலில் கவனம் செலுத்தப்படுகிறது.

இமைகளுக்கு Eye shadow, கண்களுக்கு Eyeliner, Mascara ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் புருவத்தைத் திருத்துவதும் முக்கியம்.

(படம்: Pixabay)

  •  Eye liner-ஐ பல்வேறு வண்ணங்களில் பயன்படுத்தலாம்.

எந்தவொரு உதட்டுச் சாயத்திற்கும் பொருந்தும் வகையில், முன்னர் கறுப்பு Eye liner மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

முகக்கவசத்தை அணிவதால் உதட்டுச் சாயத்திற்கு இடமில்லை.

  • கண் இமைகளுக்கு மினுமினுக்கும் (shimmer) Eyshadow-ஐப் பயன்படுத்தலாம்.

அதை இமையின் நடுப்பகுதியில் தடவினால், கண்களுக்குக் கவர்ச்சியைக் கொடுக்கும்.

(படம்: Pixabay)

  • கண் புருவத்திற்கு வண்ணம் சேர்க்கலாம்.

சிகை அலங்காரம் மீது மக்கள் கவனம் செலுத்துவது சிறப்பு.

தலைமுடியைக் காய வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியைக் (Hair dryer)கொண்டு விருப்பமான சிகை அலங்காரத்தைச் செய்துகொள்ளலாம்.

வேலையிடங்களுக்குச் செல்வோர்...

  • தங்கள் முகத்தில் Nude எனும் தோல் நிறத்திற்கு ஏற்ற ஒப்பனையைச் செய்துகொள்ளலாம்.
  • ஈரப்பதம் கொண்ட Foundation-ஐப் போன்று, சருமத்திற்குத் தகுந்த சில ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதிகமான ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தினால், அது 'pores' எனும் துளைகளை அடைக்கலாம்.
படம்: Pixabay 

சருமத்தின் ஈரப்பதத்தை உறுதிசெய்யவேண்டும்

  • முகக்கவசத்தை அணிந்தாலும் முகத்தின் ஈரப்பதத்தை உறுதிசெய்வது முக்கியம். 'Moisturizers' எனும் முகப் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தைச் சீராக்கலாம்.
  • தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும்.

முகக்கவசத்தை அணிந்தபோதிலும், நமது தோற்றம் முக்கியம் என்று கூறுகிறார், காயத்திரி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்