Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2019இல் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த சில 'Memes'

சமூக ஊடகங்களில் memes எனும் படக் கலவைகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் அவற்றைப் பகிர்ந்துகொள்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். Meme காணொளிகள், படங்களுக்காகவே சிலர் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
2019இல் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த சில 'Memes'

(படம்: Instagram/superji_memes)

சமூக ஊடகங்களில் memes எனும் படக் கலவைகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் அவற்றைப் பகிர்ந்துகொள்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். Meme காணொளிகள், படங்களுக்காகவே சிலர் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாண்டு நம்மை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த சில Memes இதோ...

1) Contractor நேசமணி

2001இல் வெளிவந்த "Friends" படத்தில் இடம்பெற்ற குத்தகையாளர் நேசமணியின் கதாபாத்திரம் இவ்வாண்டு உலகப் புகழ்பெற்றது. இணைய வாசிகளால் தொடங்கப்பட்ட #prayfornesamani எனும் hashtag உலகளவில் முதல் நிலையை எட்டியது. படத்தில் நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழும் காட்சி Meme-இல் பகிரப்படது.

பொறியாளர்கள் இருக்கும் சமூக ஊடகக் குழுவில் அவரவர் தாய்மொழியில் சுத்தியல் எப்படி அழைக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு 'சுத்தியல்' என்று பதிலளித்தவரைத் தொடர்ந்து, நேசமணி அதனால் காயமடைந்ததாகவும், அவருக்கு அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறி Meme பரவியது.

2) பிகில் திரைப்படம்

நடிகர் விஜயின் 'பிகில்' திரைப்படம் பிரபலமானதோ இல்லையோ அவர் நடித்த அந்தப் படத்தின் காட்சி ஒன்று Meme ஆகியது.

படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் விஜய் 'பிகிலு' என்று கத்துவதை, பல இணையவாசகர்கள் நகைச்சுவையாக மாற்றியமைத்தனர்.

3) Baby Yoda கதாபாத்திரம்

டிஸ்னியின் 'ஸ்டார் வார்ஸ்' கற்பனை உலகிலிருந்து உருவான தொலைக்காட்சித் தொடரில் இடம்பெறும் கதாபாத்திரம் ஒன்று பலரிடையே புகழ்பெற்றுள்ளது.

பார்க்க குழந்தை போல இருக்கும் காதாபாத்திரத்தை இணையத்தில் பலர் 'Baby Yoda' என்று அழைக்கின்றனர்.

கதாபாத்திரத்தின் முக பாவங்களை ஒட்டி பல Meme படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

4) okay boomer

90களில் பிறந்த குழுந்தைகளை எப்படி 90s kids என்று அழைக்கின்றோமோ அதே போல அவர்களின் பெற்றோர்கள் 'okay boomer' என்று அழைக்கப்படுகின்றனர்.

1940களுக்கும் 1960களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் 'baby boomers' என்று அழைக்கப்படுகின்றனர்.

பழமையான கருத்துக்கள் அல்லது எப்போதும் திட்டும் பெற்றோரை அமைதியாக்கும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது இந்த meme.

5) என் பிள்ளைகளிடம் சொல்லப் போகிறேன்

'I'm going to tell my kids' என்னும் பெயரில் தொடங்கப்பட்டது இந்த meme. ஒரு பொருளின் வடிவத்தை அல்லது சாயலைக் கொண்ட மற்றொரு பொருளைக் காட்டி பிள்ளைகளை நம்பவைக்க வேண்டும் என்ற சிலரின் முயற்சி அது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்