Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Midges ஈயின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகள்

Midges எனப்படும் ஒருவகை ஈக்கள் நீர்நிலைகளில் அருகில் அதிகம் காணப்படுகின்றன. Midges ஈக்களைக் கொசுக்கள் என்று பரவலாகப் பார்ப்பதுண்டு. அவை கொசுக்கள் அல்ல.

வாசிப்புநேரம் -
Midges ஈயின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகள்

கோப்புப் படம்: AFP/Robyn Beck

Midges எனப்படும் ஒருவகை ஈக்கள் நீர்நிலைகளில் அருகில் அதிகம் காணப்படுகின்றன. Midges ஈக்களைக் கொசுக்கள் என்று பரவலாகப் பார்ப்பதுண்டு. அவை கொசுக்கள் அல்ல.

சிங்கப்பூரில் உள்ள நீர்த்தேகங்களில் சுமார் 57 வகையான Midges ஈக்கள் உள்ளன. Midges ஈக்கள் யாரையும் கடிப்பதில்லை. நோய்களையும் பரப்புவதில்லை.

இருப்பினும் பெரும் எண்ணிக்கையில் அவை இருக்கும்போது அவை தொல்லையாக இருக்கலாம்.

அவற்றின் தொல்லையிலிருந்து பாதுகாக்கும் வழிகள்

- சன்னல், கதவு ஆகியவற்றில் பூச்சிகளைத் தடுக்க உதவும் தடுப்புகளை நிறுவலாம். Midges ஈக்கள் வீட்டினுள் நுழைய அது தடுக்கும்.

- விடியற்காலையிலும் மாலையிலும் திரைச்சீலைகளை மூடிக்கொள்ளலாம். அந்த நேரத்தில்தான் அவை துடிப்பாக இருக்கும். 

- Midges ஈக்கள் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்படுகின்றன. விளக்குகளைப் பயன்படுத்தப்படாத அறைகளில் அவற்றை அணைத்துவிடலாம். விளக்குகளின் வெளிச்ச அளவையும் குறைத்து கொள்ளலாம்.

(தகவல்: பொதுப் பயனீட்டுக் கழகம்) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்