Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இயற்கையை அனுபவித்தால் உடல்நலன் மேம்படும்: ஆய்வு

வாரத்தில் சுமார் 2 மணிநேரம் இயற்கையை அனுபவிப்பவர்கள் மேம்பட்ட உடல்நலத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாகப் புதிய பிரிட்டிஷ் ஆய்வு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இயற்கையை அனுபவித்தால் உடல்நலன் மேம்படும்: ஆய்வு

படம்: NParks

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வாரத்தில் சுமார் 2 மணிநேரம் இயற்கையை அனுபவிப்பவர்கள் மேம்பட்ட உடல்நலத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாகப் புதிய பிரிட்டிஷ் ஆய்வு தெரிவித்துள்ளது.

முழுமையாக இயற்கையில் நேரம் செலவிட்டாலும், ஆங்காங்கே சிறிது நேரம் செலவிட்டாலும் பயன்களை அனுபவிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வாரத்துக்கு 5 மணிநேரம் இயற்கையில் செலவிட்டால் அதிக நன்மை  உண்டு என்று கூறப்படுகிறது.

2014க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 20,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

வாரத்தில் சுமார் 2 மணிநேரம் இயற்கையில் செலவிட்டவர்கள், இயற்கையில் நேரம் செலவிடாதவர்களைக் காட்டிலும் 23 விழுக்காடு மேம்பட்ட மனநலத்தை அனுபவித்ததுடன், 59 விழுக்காடு ஆரோக்கியமாய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து வயதையும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த ஆண்கள், பெண்களிடையே ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

எந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இயற்கையில் நேரம் செலவிடுவது நல்லது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்