Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கொசுக் கடி - அரிப்புக்கு நிவாரணம்?

கொசுக் கடி. பெரும்பாலான வேளைகளில் பெரிய ஆபத்தை விளைவிக்காது.  ஆனால் இடைவிடாத அரிப்பால் எரிச்சல் ஏற்படும்.  அதை எப்படிச் சமாளிப்பது?

வாசிப்புநேரம் -
கொசுக் கடி - அரிப்புக்கு நிவாரணம்?

(படம்: Pixabay)


கொசுக் கடி.

பெரும்பாலான வேளைகளில் பெரிய ஆபத்தை விளைவிக்காது.

ஆனால் இடைவிடாத அரிப்பால் எரிச்சல் ஏற்படும்.

அதை எப்படிச் சமாளிப்பது?

1. 'ஐஸ்' கட்டிகளைப் பயன்படுத்துவது

கொசுக் கடித்த இடம் லேசாகத் தடித்திருக்கும். அந்தத் தடிப்பைக் குறைக்க 'ஐஸ்' கட்டிகள் உதவும். அதோடு தோல் உணர்வற்றுப்போகும். இதனால் அரிப்பு தற்காலிகமாகக் குறையும்.

ஆனால் ஐந்து நிமிடங்களுக் மேல் 'ஐஸ்' கட்டியை நேரடியாகத் தோலின் மீது வைக்காதீர்கள். அது தோலைப் பாதிக்கக்கூடும். சுத்தமான துணியில் 'ஐஸ்' கட்டியை வைத்து அதைச் சருமத்தின்மீது வைக்கலாம்.

2. Calamine 'கிரீம்' பயன்படுத்தலாம்

இதைச் சாதாரண மருந்தகத்தில் வாங்கி சருமத்தின் மீது பூசலாம்.

3. Baking Soda பயன்படுத்தலாம்

சிறிதளவு Baking Sodaவையும் தண்ணீரையும் கலந்து பசையாக ஆக்குங்கள்.

கொசுக் கடித்த இடத்தில் அதைத் தடவி 10 நிமிடங்கள் காத்திருங்கள்.

பின் கழுவிவிடுங்கள்.

இதனால் ஏதாவது அரிப்பு ஏற்பட்டது என்றால் மீண்டும் அவ்வாறு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. Oats தானியம்

அரிப்பைக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது oats.

அதைத் தண்ணீருடன் கலந்து பசை வடிவாக்கவும்.

கொசுக் கடித்த இடத்தில் அந்த பசையை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் துடைத்துவிடவும்.

பல இடங்களில் கொசுக் கடியா?

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் oats கலந்து குளியல் தொட்டியை நிரப்புங்கள்.

சுமார் 20 நிமிடங்கள் குளியல் தொட்டியில் உடம்பை ஊறவிடுங்கள்.

அவ்வப்போது oats பசையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.

அரிப்பு குறையக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்