Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2018இன் பிரமாண்டமான திருமணங்கள்

தம்பதிகளின் வாழ்க்கையில் முக்கியமான நாள் திருமண நாள்.

வாசிப்புநேரம் -
2018இன் பிரமாண்டமான திருமணங்கள்

(படம்: Reuters)

தம்பதிகளின் வாழ்க்கையில் முக்கியமான நாள் திருமண நாள்.

அதில் எந்தவிதக் குறையும் இருக்கக்கூடாது என்று பார்த்து, பார்த்து திட்டமிடுவார்கள் குடும்பத்தினர்.

ஏராளமான ஏற்பாடுகள். ஆடம்பரமான செலவுகள்.

அந்த வகையில் அமைந்த சில பிரமாண்டமான திருமணங்களின் கண்ணோட்டம்:

1. இளவரசி இயூஜினி, ஜெக் புருக்ஸ்பெங்க் (Princess Eugenie, Jack Brooksbank)

செலவு: சுமார் 3.5 மில்லியன் டாலர்

இங்கிலாந்தின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசி இயூஜினி.

எலிஸபெத் ராணியின் பேத்தி என்றால் சும்மாவா?

விண்ட்சர் அரண்மனையிலிருக்கும் தேவாலயத்தைப் பூக்களால் நிரப்பவே பெரும் செலவானதாம்.

சுமார் 130,000 டாலர் செலவில் அந்தப் பணி நடந்தது.

2. இளவரசர் ஹெர்ரி, இளவரசி மேகன் மார்க்கல் (Prince Harry, Meghan Markle)

(படம்: DANNY LAWSON/AFP)

செலவு: சுமார் 46 மில்லியன் டாலர்

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸின் இரண்டாம் மகன் ஹெர்ரி.

அமெரிக்கப் பிரபலம் மேகன் மார்க்கல்.

இருவரும் உலகிற்கு நன்கு அறிமுகமான பிரபலங்கள் என்பதால் அவர்களுடைய திருமண நாளை உலகமே உன்னிப்பாகக் கவனித்தது.

பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்தது அவர்களது திருமணம்.

16அடி நீளம் கொண்ட மேகனின் முகத்திரையில் 53 காமன்வெல்த் நாடுகளின் பூக்களும் இடம்பெற்றன.

அந்த முகத்திரை, ஆடை அனைத்தும் கிட்டத்தட்ட 500,000 டாலருக்கு வடிவமைக்கப்பட்டன.

ஆனால் திருமணச் செலவில் பெரும் பங்கை வகித்தது அதுவல்ல.

திருமணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 35 மில்லியன் டாலர் செலவானதாம்!

3. ஈஷா அம்பானி, ஆனந்தா பிரமால்

(படம்: Reuters)

செலவு: சுமார் 100 மில்லியன் டாலர்

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரின் மகளது திருமணச் செலவுகளுக்குக் குறைவே இல்லை.

ஒரு வாரம் தொடர்ந்த திருமணக் கொண்டாட்டங்களின் செலவு 100 மில்லியன் டாலர்.

ஒப்புநோக்க, வரலாற்றில் உலகின் ஆக ஆடம்பரமான திருமணமாகக் கருதப்படும் இளவரசி டயானா, இளவரசர் சார்ல்ஸின் திருமணச் செலவு 110 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது.

பெட்டி வடிவத்தில் இருந்த அம்பானி குடும்பத்துத் திருமண அழைப்பிதழ் ஒவ்வொன்றும் 4,290 டாலராம்!

வரலாற்றில் ஆக விலையுயர்ந்த திருமண அழைப்பிதழ் இது.



  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்