Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திரும்பிப் பார்ப்போமா: Instagram-இல் அதிகமாகப் பின்தொடரப்படும் பிரபலங்கள் யார் யார்?

சமூக ஊடகத் தளமான Instagram-இல் அதிகமாகப் பின்தொடரப்படும் பிரபலங்களின் பட்டியல் இதோ:

வாசிப்புநேரம் -

சமூக ஊடகத் தளமான Instagram-இல் அதிகமாகப் பின்தொடரப்படும் பிரபலங்களின் பட்டியல் இதோ:

5. கிம் கர்தாஷியன் (Kim Kardashian)

கணக்கைப் பின்தொடர்பவர்கள் - சுமார் 155 மில்லியன் பேர்

  • அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கிம் கர்தாஷியன்.
  •  'Keeping Up with the Kardashians' என்னும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரின்மூலம் அவர் 2007ஆம் ஆண்டில் புகழ் பெற்றார்.
  • தொழில்முனைவராகவும் வலம் வரும் அவர் சமூக ஊடகத்தின்மூலம் ரசிகர்களிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியக் கூடியவராகவும் திகழ்கிறார்.
  • விளம்பரங்களில் தோன்றியதற்காக எடுத்துக்கொண்ட படங்களோடு, தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட பல படங்களையும் அவர் பதிவுசெய்துள்ளார்.
  • பழைய குடும்பப் படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

4. செலினா கோமெஸ் (Selena Gomez)

கணக்கைப் பின்தொடர்பவர்கள் - கிட்டத்தட்ட 164 மில்லியன் பேர்

View this post on Instagram

studio diva

A post shared by Selena Gomez (@selenagomez) on

  • அமெரிக்க இசைத் துறையில் செலினா கோமெஸ் பிரபலம்.
  • பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் எனப் பன்முக வித்தகர் அவர். 
  • Barney & Friends என்னும் சிறுவர் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமான பிறகு, மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.
  • அவரது கணக்கில் selfie படங்கள், நண்பர்களுடன் எடுத்துகொண்ட படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • பெண் உரிமைகளை வெளிப்படுத்தும் பதிவுகளை அவர் பதிவேற்றியுள்ளார்.

3. 'தி ராக்' புகழ் டுவைன் ஜான்சன் (Dwayne ‘The Rock’ Johnson )

கணக்கைப் பின்தொடர்பவர்கள் - ஏறத்தாழ 165 மில்லியன் பேர்

  • புகழ்பெற்ற மல்யுத்த வீரர் டுவைன் ஜான்சன் ரசிகர்களால் 'தி ராக்' என அழைக்கப்படுகிறார்.
  •  நடிகரான அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.
  • அவரது கட்டான கட்டுடலைக் காட்டும் படங்கள் உள்பட உடற்பயிற்சிக் கூடத்தில் எடுத்த படங்களும் கணக்கில் இடம்பெற்றுள்ளன.
  • திரைப்படப் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஏராளமான படங்களையும் அவரது கணக்கில் காணலாம்.

2. அரியானா கிராண்டே ( Ariana Grande)

கணக்கைப் பின்தொடர்பவர்கள் - சுமார் 169 மில்லியன் பேர்

View this post on Instagram

man........... the whole point of it all ��

A post shared by Ariana Grande (@arianagrande) on

  •  அமெரிக்க இசைப் பிரபலம் அரியானா கிராண்டே.
  •  அவர் Instagramஇல் ஆக அதிகமாகப் பின்தொடரப்படும் பெண் பிரபலம்.
  •  கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் பதிவேற்றிய ஒரு படம் சுமார் 12.8 மில்லியன் விருப்பக் குறிகளைப் பெற்றது. மேலும் அது, சென்ற ஆண்டு அதிக விருப்பக் குறிகளைப் பெற்ற Instagram படங்களின் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்தது. அது அவர் தமது முன்னாள் காதலர் மேக் மில்லருக்கு (Mac Miller) நினைவஞ்சலி செலுத்தும் கறுப்பு, வெள்ளைப் படம்.
  •  மற்ற பிரபலங்களை அவர் சந்திக்கும் படங்கள், அவரது நிகழ்ச்சி தொடர்பான படங்கள் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளன.
  • அவரது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் பொதுவான படங்களையும் ரசிகர்கள் காணலாம்.

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ ( Cristiano Ronaldo)

கணக்கைப் பின்தொடர்பவர்கள் - சுமார் 194 மில்லியன் பேர்

  •  பிரபலமான காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
  • Juventus காற்பந்துக் குழுவைப் பிரதிநிதித்து விளையாடும் அவர் முன்னணி ஆட்டக்காரராகத் திகழ்கிறார்.
  • போர்ச்சுகல் தேசியக் காற்பந்துக் குழுவின் தலைவராகவும் அவர் விளங்குகிறார்.
  • ஏராளமான குடும்பப் படங்கள் உள்பட அவர் காற்பந்து விளையாடும் படங்களும் அவரது கணக்கில் இடம்பெற்றுள்ளன.
  • வாழ்க்கையில் தாம் ரசித்து அனுபவித்த அம்சங்களையும் அவர் படமெடுத்துப் பதிவேற்றியுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்