Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயணம் செய்யும்போது ஏற்படும் தலைச் சுற்றலை எப்படிச் சமாளிப்பது?

பேருந்து, கார், ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தலை சுற்றுவதைப்போலவோ வாந்தி வருவதைப்போலவோ சிலருக்குத் தோன்றலாம்.

வாசிப்புநேரம் -

பேருந்து, கார், ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தலை சுற்றுவதைப்போலவோ வாந்தி வருவதைப்போலவோ சிலருக்குத் தோன்றலாம்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அவ்வாறு ஏற்படும் சாத்தியம் அதிகம். அதிலும் கர்ப்பிணிகளுக்கு அது இன்னும் அதிகம்.

வாகனங்களில் பயணம் செய்யும்போது தலை சுற்றுவதைப்போலவோ, வாந்தி வருவதைப் போலவோ ஏன் தோன்றுகிறது? அதை எப்படிச் சமாளிப்பது ? கூறுகிறார் மருத்துவர் எட்வின் செங் (Edwin Chng)

அருகே செல்லும் வாகனங்கள், மரங்கள், தொலைவிலுள்ள கட்டடங்கள் எல்லாம் கண்ணுக்கு விரைவது தெரியும். உடலும் பயணத்தை உணரும்.

ஆனால், நம் கண்கள் திறன்பேசியில் கவனம் செலுத்தும்போது, அவை நாம் நகரவில்லை என்ற எண்ணத்தை மூளையில் ஏற்படுத்தும். உடல் சமிக்ஞை ஒன்றை உணர்த்தும்போது, கண்கள் வேறுவிதமான சமிக்ஞையை அனுப்பினால் ஏற்படும் குழப்பம் தலைச் சுற்றலை ஏற்படுத்தும்.

அதை தவிர்ப்பதற்கு, பயணம் செய்யும்போது அவ்வப்போது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது நல்லது.

ஓட்டுநருக்கோ சக பயணிக்கோ ஏற்படும் உடல் துர்நாற்றத்தை வாசனைத் திரவங்கள் மூலம் சமாளித்தல்

வாகனத்துக்குள் அமர்ந்திருக்கும்போது அருகிலுள்ளவர்களின் வேர்வை, டுரியான், காலாவதியான உணவு போன்றவை தரும் துர்நாற்றம் தலை வலி, தலைச் சுற்றலை அளிக்கக்கூடியது.

அதைச் சமாளிக்க, லெவெண்டர் (Lavender), பெப்பர்மிண்ட் (Peppermint), லெமன்கிராஸ் (Lemongrass) எண்ணெயை நெற்றியில் தடவலாம். கைகளில் தேய்த்து மோந்து பார்க்கலாம்.

அந்த வாசனை, நமக்கு இதமளிக்கும்.

வாகனங்களில், பின்புறத்தை நோக்கி அமைந்திருக்கும் இருக்கைகளைத் தவிர்த்தல்

வாகனம் முன்னோக்கிச் செல்லும்போது நாம் பின்னோக்கிப் பார்க்கும் இருக்கையில் அமர நேரலாம்.

அப்போது உடல் அசைவின் அடிப்படையில் மூளை முன்னோக்கிப் போவதை உணரும். ஆனால் கண்களோ பின்னோக்கிப் போவது போன்ற மாறுபட்ட சமிக்ஞையை அனுப்பும்.

இதனால் குழப்பம். விளைவு ? தலை சுற்றல்.

இதைத் தவிர்ப்பதற்கு, கூடியமட்டும் அத்தகைய இருக்கைகளைத் தவிர்க்கலாம்.

இயலாதபோது ஜன்னலுக்கு வெளியே, பேருந்து செல்லும் திசையை நோக்கிப் பார்வையைத் திருப்பிக்கொள்ளலாம்.

அப்போது உடலும் மனமும் ஒரே விதமான சமிக்ஞையை அனுப்பும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்