Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்கள் சொந்தக் குரலில் பேச உதவும் செயலி

தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்துள்ளது ஒரு செயலி.

வாசிப்புநேரம் -
தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்கள் சொந்தக் குரலில் பேச உதவும் செயலி

படம்: AFP / Michal Cizek

தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்துள்ளது ஒரு செயலி.

பேச முடியாத நிலையிலும் அந்தச் செயலியைக் கொண்டு நோயாளிகள் பேசலாம்... அவர்களின் சொந்தக் குரலில்.

புற்றுநோயின் முற்றிய கட்டத்தில் குரல்வளையை அகற்றவேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது நோயாளிகளால் பேசமுடியாது.

என்ன கூறவேண்டுமோ அதைச் செயலியில் தட்டச்சு செய்தால், பயனீட்டாளரின் குரலைப் போலவே ஒரு குரலில் செயலி பேசும்.

துல்லியமாகச் சொந்தக் குரலைப் போல் ஒரு குரலை உருவாக்க நோயாளிகள் சுமார் 10,000 வாக்கியங்களை தங்கள் குரலில் செயலிக்குள் பதிவு செய்யவேண்டும்.

சிகிச்சை பெறும் அதே வேளையில் வாக்கியங்களைப் பதிவு செய்ய இயலாமல் போகலாம் என்பது ஒரு பின்னடைவு.

சில சமயங்களில் நோயாளிகளுக்கு அதனைச் செய்யப் போதிய நேரமும் சக்தியும் இருக்காது என்றனர் செயலியை உருவாக்கிய ஆய்வாளர்கள்.

எனினும், செயலி நோயாளிகளுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

செக் குடியரசைச் சேர்ந்த மேற்கு பொஹிமியா பல்கலைக் கழகம், சார்ல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இரண்டு தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தப் புதிய செயலியை உருவாக்கியுள்ளன.

சுமார் ஈராண்டுக்கு முன்னர் அதற்கான பணி தொடங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்