Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்

ஒரேயடியாக மிகக் கடினமான தீர்மனங்களை எடுத்துச் சிரமப்படுவதற்குப் பதிலாக இந்த எளிமையான பழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்.

வாசிப்புநேரம் -
புத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்

(படம்: AFP/Attila Kisbenedek)

புத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்?

ஒரேயடியாக மிகக் கடினமான தீர்மனங்களை எடுத்துச் சிரமப்படுவதற்குப் பதிலாக இந்த எளிமையான பழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்.

நிபுணர்கள், மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் கூறும் யோசனைகள் இதோ....

1) உணவை மெதுவாக மென்று சாப்பிடலாம்
வார நாள்களில் கொடுக்கப்படும் ஒரு மணிநேர மதிய உணவு இடைவேளைகளில் பொறுமையாகச் சாப்பிட சிலருக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உணவை மெல்ல மென்று சாப்பிடுவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெறமுடியும், உணவும் எளிதாகச் செரிமானமாகும்.

2) திரைகளுக்கு முன்னால் செலவிடும் நேரத்தைக் குறைக்கலாம்

சிங்கப்பூரர்கள் ஒரு நாளில் சுமார் 12 மணிநேரத்தைச் செலவிடுவதாக Ernst &Young கடந்தாண்டு செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவில் திரைகளின் முன் அதிக நேரம் செலவிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மற்றவர்களுடன் செலவிடும் நேரமும் பாதிக்கப்படுகிறது. புத்தாண்டில் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம். அதற்கு உதவ சில செயலிகளையும் பதிவிறக்கம் செய்யலாம் என்பது மனநல மருத்துவர்களின் ஆலோசனை.

3) காலையில் சற்று முன்னதாகவே துயில் எழலாம்

சூரியன் உதிக்கும் முன்னரே சிலர் காலையில் எழுந்துவிடுவர். சிலரோ எத்தனை முறை கடிகார மணி அடித்தாலும் எழ முடியாமல் சிரமப்படுவர். அத்தகைய பழக்கத்தை மாற்ற முனைபவர் நீங்களானால், அடுத்த முறை எப்போதும் எழும் நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே எழ முயலுங்கள். கிடைக்கும் கூடுதல் 10 நிமிடங்களில் பல அர்த்தமுள்ள செயல்களைச் செய்யலாம்.

4) தண்ணீர் குடிக்கலாம்

நம் உடலில் 70 விழுக்காட்டுக்கு மேல் இருப்பது தண்ணீர். நம் உடலுறுப்புகள் சரிவரச் செயல்பட தண்ணீர் அத்தியாவசியமானது. புதிய வருடத்தில் அன்றாடம் உட்கொள்ளும் தண்ணீர் அளவை அதிகரிக்கலாம். காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீருடன் பொழுதைத் தொடங்கலாம்.

5) உங்களுக்கென நேரம் ஒதுக்கலாம்

தனிமையிலே இனிமை காணமுடியும். ஒரு வாரத்தில் சுமார் ஓரிரண்டு மணி நேரத்தை உங்களுக்கென ஒதுக்கப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் இறங்குங்கள். ஓவியம் வரைதல், புதியனவற்றைச் சமைத்தல் போன்ற மனத்துக்குப் பிடித்தவற்றைச் செய்யும்போது உங்களுக்கு ஒருவகை மன நிம்மதி கிடைக்கும். அது மனநலத்தைக் கொடுக்கும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்