Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கெட்ட கனவுகள் வருகின்றனவா? எப்படிப் போக்குவது?

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏதோ ஒரு கெட்ட நினைவு. உடனே எழுந்துவிடுகிறோம்.

வாசிப்புநேரம் -
கெட்ட கனவுகள் வருகின்றனவா? எப்படிப் போக்குவது?

(படம்: Pixabay)

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏதோ ஒரு கெட்ட நினைவு.

உடனே எழுந்துவிடுகிறோம்.

கெட்ட கனவுகள் ஏன் ஏற்படுகின்றன?

கெட்ட கனவுகள் பல காரணங்களால் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இரவில் நேரம் கழித்துச் சாப்பிடும்போது அது செரிமானம் ஆகும் வேளையில் நாம் தூங்கும்போது மூளை வழக்கத்தை விடத் துரிதமாகச் செயல்படுகிறது.

சில மருந்துகளும் கெட்ட கனவுகள் ஏற்படக் காரணமாகயிருக்கலாம். மனச்சோர்வுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் போன்றவை மூளையிலுள்ள சுரப்பிகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் கெட்ட கனவுகள் உண்டாகக்கூடும்.

ஒரே கெட்ட கனவு மீண்டும் மீண்டும் உங்களை இரவில் எழுப்பிவிடுகிறதா? மனத்தை ஏதோ ஒன்று துன்பப்படுத்திக்கொண்டிருந்தாலும் கெட்ட கனவுகள் ஏற்படக்கூடும்.

மனத்தைப் பெரிதும் பாதித்த சம்பவங்களும் மீண்டும் மீண்டும் கெட்ட கனவுகளாக உண்டாகலாம்.

கெட்ட கனவுகளைப் போக்க சில வழிகள்:

படம்: Pixabay 

1. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரே நேரம் தூங்குவதும் எழுவதுமாகப் பழகிக்கொள்ள வேண்டும்

2. உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

3. யோகாசனம் செய்யலாம்

4. படுக்கையறையில் மனவுளைச்சலுக்கு இடமில்லை. மனம் சுத்தமாக, அமைதியாக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

5. காப்பி, தேநீர், சுவைபானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் தவிர்த்துவிடவும்.

6. கெட்ட கனவுகள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால், நிபுணரை நாடுங்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்