Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ரத்தத் துளிகளைக் கொண்ட "சாத்தான் காலணிகளை" தயாரித்த நிறுவனத்தின் மீது Nike வழக்கு

காலணித் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Nike, நியூயார்க்கில் உள்ள காலணி நிறுவனம் ஒன்றின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
ரத்தத் துளிகளைக் கொண்ட "சாத்தான் காலணிகளை" தயாரித்த நிறுவனத்தின் மீது Nike வழக்கு

(கோப்புப் படம்: Stephanie Keith/Getty Images/AFP)

காலணித் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Nike, நியூயார்க்கில் உள்ள காலணி நிறுவனம் ஒன்றின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

MSCHF என்ற அந்த நிறுவனம் பிரபல சொல்லிசைப் பாடகர் லில் நாஸ் X-யை (Lil Nas X) விளம்பரப்படுத்தி சாத்தான் காலணிகளை வடிவமைத்தது.

அந்தக் காலணிகளில் ஒரு துளி ரத்தமும் உள்ளது.

காலணிகள் Nike நிறுவனத்தின் Air Max 97 காலணிகள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் பதிப்புரிமை மீறலின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது Nike நிறுவனம்.

சாத்தான் வகைக் காலணிகளைச் சிறப்பு வெளியீடாக MSCHF நேற்று விற்பனை செய்தது.

சிறப்பு வெளியீடு என்பதால் அவ்வகைக் காலணிகள் 666 மட்டுமே விற்பனைக்கு வந்தன.

விற்பனைக்கு வந்த ஒரு நிமடத்திற்குள் காலணிகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு ஜோடிக் காலணிகளின் விலை 1,370 வெள்ளி.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்