Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எந்தப் பக்கம் சுற்றுகிறது? குழப்புகிறது, உலகின் ஆகச் சிறந்த கண்வித்தைப் படம்

வலதுபுறமாகச் சுற்றுவது போல இருக்கும். அதே வேளையில் இடதுபுறமாகச் சுற்றுவது போலவும் இருக்கும். 

வாசிப்புநேரம் -
எந்தப் பக்கம் சுற்றுகிறது? குழப்புகிறது, உலகின் ஆகச் சிறந்த கண்வித்தைப் படம்

(படம்: The Illusion contest/YouTube)

அமெரிக்கா: வலதுபுறமாகச் சுற்றுவது போல இருக்கும்.

அதே வேளையில் இடதுபுறமாகச் சுற்றுவது போலவும் இருக்கும்.

மேலிருந்து கீழ் சுற்றுகிறதா? கீழிருந்து மேல் சுற்றுகிறதா?

குழப்பம்.

ஆனால் பார்த்தால் நிறுத்தமுடியாது.

அப்படிப்பட்ட கவரும்தன்மையைக் கொண்டது Dual Axis எனும் படைப்பு.

Dual Axis என்பது படைக்கப்பட்ட விதத்தால் கண்களையும் மூளையையும் ஏமாற்றும் தன்மையைக் கொண்ட optical illusion.

டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஃபிரெங்க் ஃபோர்ஸ் (Frank Force) என்பவர் கணினியில் அதனை உருவாக்கியதாக Vice செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Neural Correlate Society அந்தப் படைப்பை இவ்வாண்டின் ஆகச் சிறந்த optical illusionஆகத் தேர்ந்தெடுத்துள்ளது.

காணொளி விளையாட்டுகளின் மென்பொருளைத் தயாரிக்கும் பணியில் உள்ள ஃபோர்ஸின் முதல் optical illusion இல்லை இது.

ஆனால் அவர் தயாரித்த படைப்புகளில் சிறந்த ஒன்றாக அது திகழ்கிறது.

ஒன்றைப் பல கோணங்களிலிருந்து பார்ப்பதற்குச் சமமாக தம்முடைய படைப்பைக் கருதுகிறார் ஃபோர்ஸ்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்