Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

COVID-19 நோயாளிகளுக்கு எந்தக் கட்டத்தில் உயிர்வாயு ஆதரவு தேவைப்படுகிறது?

இந்தியாவில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் உயிர்வாயுப் பற்றாக்குறையால் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் உயிர்வாயுப் பற்றாக்குறையால் மாண்டனர்.

சராசரி மனித உடல் செயல்பாட்டுக்கு எவ்வளவு உயிர்வாயு தேவை?

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர்வாயு அளவு எவ்வளவு குறைகிறது?

அது குறித்து 'செய்தி'யிடம் மேலும் பகிர்ந்து கொண்டார் மருத்துவர் டாக்டர் கண்ணன்.

சுவாசம் அல்லது நுரையீரல் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லாத நோயாளிகளின், உயிர்வாயு அளவு 95 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை இருக்கும்.

COVID-19 கிருமித்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் செயல்பாடு குறைவதால், நோயாளிகளின் உயிர்வாயு அளவு குறையும்.

என்று டாக்டர் கண்ணன் கூறினார்.

சிலருடைய உயிர்வாயு அளவு 80லிருந்து 85 விழுக்காட்டுக்குக் குறையும்போதுதான், நோய்வாய்ப்பட்டுள்ளதை அவர்கள் உணரத் தொடங்குவார்கள் என்று அவர் சொன்னார்.

உயிர்வாயு அளவு மேன்மேலும் குறையும்போது, நோயாளிகளின் உடல் நெருக்கடி நிலையை அடைகிறது. அவர்களின் உடல்நலமும் மோசமாகும்.

COVID-19 நோயாளிகளுக்கு எந்தக் கட்டத்தில் உயிர்வாயு ஆதரவு தேவைப்படுகிறது?

நோய்வாய்ப்பட்டிருக்கும் காலகட்டத்தில், உயிர்வாயு அளவில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

COVID-19 நோயாளிகள் சிலரின் உயிர்வாயு அளவு குறைவாக இருந்தாலும், அவர்கள் உடல்நலத்துடன் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்கள் எந்த சிகிச்சையுமின்றி குணமடையலாம்.

எனினும், ஒருவரின் உடல், குறைவான உயிர்வாயு அளவை நீண்ட நேரத்திற்குச் சமாளிக்க வேண்டியிருந்தால், அவரின் உடல் நெருக்கடி நிலையை அடையலாம்.

அப்போது, உயிர்வாயு ஆதரவு இல்லையென்றால், நோயாளிகளின் உடல்நலம் மோசமாகத் தொடங்கும்.

என்று டாக்டர் கண்ணன் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்