Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சித்திரத்திற்குள் சித்திரம்...

இணையத் தளமான Reddit-இல், தமது தாயார் வரைந்த சித்திரம் ஒன்றை  சில நாட்களுக்கு முன்னர் ஆடவர் ஒருவர் பகிர்ந்தார்.

வாசிப்புநேரம் -
சித்திரத்திற்குள் சித்திரம்...

படம்: Vincent Law / Facebook

இணையத் தளமான Reddit-இல், தமது தாயார் வரைந்த சித்திரம் ஒன்றை  சில நாட்களுக்கு முன்னர் ஆடவர் ஒருவர் பகிர்ந்தார்.

அழகிய கொக்கை ஓவியமாகத் தீட்டியிருந்தார் அந்தத் தாய்.

ஓவியத்துடன் தமது தாயாரையும் படமாக எடுத்து அவர் இணையத்தில் பதிவு செய்தார்.

இரண்டாவது முறையாக மட்டுமே ஓவியம் வரைந்தார் என்றும் அது யாருக்கும் பிடிக்காது என்றும் தமது தாயார் கூறியிருந்ததை அந்த ஆடவர் பகிர்ந்துகொண்டார்.

ஆனால், இணையம் வழி தாய்-மகன் இருவருக்கும் கிடைத்தது பெரியதொரு ஆச்சரியம்.

Reddit-இல் ஆடவர் பதிவேற்றம் செய்திருந்த நிழற்படத்தை மற்றொரு ஆடவரான கிரிஸ்டோஃபர் (Kristoffer) பின்னர் சித்திரமாகத் தீட்டினார்.

தீட்டி முடிந்த ஓவியத்தைக் கையில் பிடித்தவாறு கிரிஸ்டோஃபர் படமெடுத்து அதை Reddit தளத்தில் பதிவு செய்தார்.

அந்தப் படத்தை Reddit பயனீட்டாளர் வேறொருவர் ஓவியமாக வண்ணம் பூசினார்.

இவ்வாறு சித்திரத்திற்குள் சித்திரமாக அந்தத் தாயாரின் ஓவியம் உருவெடுத்தது.

தாயாருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது மற்றவர்களின் ஓவியங்கள்.

ஓவியப் படைப்புகள், Reddit பயனீட்டாளர்களின் கண்களை மட்டுமல்லாமல் மற்ற சமூக வலைத்தளப் பயனீட்டாளர்களையும் ஈர்த்தன.

ஓவியங்களின் நிழற்படங்கள் காட்டுத்தீப் போல் பரவி வருகின்றன. இதுவரை Facebook-இல் மட்டுமே அந்தப் படங்கள் 234,000 முறை பகிரப்பட்டன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்