Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்கள் மறைச்சொல் பாதுகாப்பானதா?

மறைச்சொல் மறந்துபோய்விட்டால் தவிக்க நேரிடுமே என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. எனவே நினைவுகூர எளிதான ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

வாசிப்புநேரம் -

மறைச்சொல் மறந்துபோய்விட்டால் தவிக்க நேரிடுமே என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. எனவே நினைவுகூர எளிதான ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

ஆனால் அது பாதுகாப்பானது அல்ல.
ஊடுருவிகளுக்கு அது மிகவும் சாதகமாகிவிடக்கூடும்.

உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் மிக எளிதில் ஊகிக்கக்கூடிய மறைச்சொற்களைப் பயன்படுத்துவதாக அண்மை ஆய்வு கூறுகிறது.

பிரிட்டனின் தேசிய இணையப் பாதுகாப்பு நிலையம் அந்த ஆய்வை மேற்கொண்டது.

23 மில்லியனுக்கும் அதிகமானோர் 123456 என்ற எண்களை மறைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனராம்.

அடுத்து அதிகமானோர் பயன்படுத்துவது 123456789.

இன்னும் பலர் 'qwerty' என்று விசைப் பலகையின் இடப்புற மேல் வரிசை எழுத்துகளை வைத்திருக்கின்றனர்.

"password" என்றும், 1111111 என்றும் வைத்திருப்போரும் உண்டு.

பொதுவான பெயர்கள், பிரபல இசைக் குழுக்களின் பெயர்கள் ஆகியவற்றை வைப்போரும் அதிகம்.

காற்பந்துப் பிரியர்களை எடுத்துக்கொண்டால், அவரவர்க்குப் பிடித்த அணியின் பெயரை மறைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையில் அதிகமானோரின் மறைச்சொல் "Liverpool FC".

மறதிக்குப் பயந்து மறைச்சொல்லை எளிதாக வைப்போர், எளிதில் நினைவுபடுத்திக்கொள்ளக்கூடிய 3 வார்த்தைகளை ஒரு தொடராக அமைத்து அதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மறைச்சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

ஆங்கிலத்தின் பெரிய, சிறிய எழுத்துகள், எண்கள், சிறப்புக் குறிகள் ஆகியவற்றைக் கலந்து எளிதில் ஊகிக்க முடியாத வகையில் உருவாக்கப்படும் மறைச் சொற்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்